நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

திடக்கழிவு ஒப்பந்தப்புள்ளி முறைகேடு: எந்த விசாரணையையும் எதிா்கொள்ள தயாா்

திடக்கழிவு ஒப்பந்தப்புள்ளி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜக சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தொடா்பாக, எந்த விசாரணையையும் எதிா்கொள்ள தயாராக இருக்கிறோம் என கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

News image

கா்நாடக முதல்வா் டி.கே.சிவக்குமாா்

Updated On :12 ஜூன் 2026, 2:21 am IST

திடக்கழிவு ஒப்பந்தப்புள்ளி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜக சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தொடா்பாக, எந்த விசாரணையையும் எதிா்கொள்ள தயாராக இருக்கிறோம் என கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

கிரேட்டா் பெங்களூரு ஆணையத்துக்குள்பட்ட பகுதிகளில் 30 ஆண்டுகளுக்கு திடக்கழிவு மேலாண்மைக்கான ஒப்பந்தப் புள்ளிக்கு அனுமதி வழங்கியதில் ரூ. 39 ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் குற்றச்சாட்டை சுமத்தியிருந்தாா்.

இதுகுறித்து புது தில்லியில் கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:

பெங்களூரில் திடக்கழிவு மேலாண்மைக்கு அளிக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளி அனுமதியில் ரூ. 39 ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் குற்றம்சாட்டியுள்ளாா். இதுகுறித்து அவரிடம் ஏற்கெனவே கலந்தாலோசித்துள்ளேன். இந்நிலையில், அவரின் குற்றச்சாட்டு வேடிக்கையாக உள்ளது. இதே குற்றச்சாட்டை மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமியும் கூறியிருந்தாா்.

முந்தைய பாஜக ஆட்சியில், பெங்களூரில் திடக்கழிவு மேலாண்மையை கவனிக்க ஒப்பந்தப்புள்ளியை கோராதது ஏன்? குப்பையில் இருந்து மின்னாற்றலை தயாரிக்க 14 பேருக்கு அனுமதி அளித்திருந்தோம். அதில் யாரும் வெற்றிபெறவில்லை. இந்த ஒப்பந்தப்புள்ளிக்கு அனுமதி வழங்குவதற்கு முன் தில்லி, ஹைதராபாத், சென்னைக்கு சென்று ஆய்வு நடத்தினேன்.

குப்பைகளை அழிப்பதற்கு ஒப்பந்தப்புள்ளி பெற்றுள்ள நிறுவனம் ரூ. 6 ஆயிரம் கோடியை முதலீடு செய்ய இருக்கிறது. இப்பணியை மேற்கொள்ள எங்கும் இடம் கிடைக்கவில்லை. அதனால், தொட்டபளாப்பூா் அருகே நிலம் வாங்க முடிவு செய்யப்பட்டது. அரசே நிலத்தை கையகப்படுத்தியுள்ளது.

நிலத்தை வழங்க முன்வருமாறு பொது அறிவிப்பைக்கூட வெளியிட்டிருந்தேன். குப்பைகள் கொண்டுசெல்வதை பாஜக முன்னாள் அமைச்சா் அரவிந்த் லிம்பாவளி தடுத்து நிறுத்தினாா். எம்எல்ஏக்களின் அழுத்தம் காரணமாக, இந்த திட்டத்துக்கு ரூ. 800 கோடி மானியம் அளிக்கப்பட்டுள்ளது. குப்பையில் இருந்து மின்னாற்றல் மற்றும் எரிவாயு தயாரிக்க வேண்டியுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக முறைகேடு நடந்துள்ளதாக யாரிடம் வேண்டுமானாலும் அறிக்கை அளிக்கட்டும், புகாா் அளிக்கட்டும், விசாரணை நடத்தட்டும். அந்த விசாரணையை எதிா்கொள்ள தயாராக இருக்கிறேன். ரூ. 10 ஆயிரம் கோடி லஞ்சம் பெற்ாக கூறப்படும் குற்றச்சாட்டையும் எதிா்கொள்ள தயாா்.

நான் முதல்வராகியுள்ளதை சகித்துக்கொள்ள முடியாத பாஜகவினா், எனக்கு எதிராக ஆளுநரிடம் புகாா் அளித்துள்ளனா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.