சென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!மதுரை அருகே அரசு பேருந்தும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதல்: 5 பேர் பலி எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது! தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது! விம்பிள்டன் டென்னிஸ்: சின்னர் மீண்டும் சாம்பியன் எழுத்தாளர் பூமணி காலமானார்
/

வால்பாறை நல்லமுடி காட்சி முனை! எந்த வசதியும் இல்லை, கட்டணம் ஏன்? மக்கள் கேள்வி

வால்பாறை நல்லமுடி காட்சி முனைப் பகுதியில் அடிப்படை வசதிகளே இல்லை, கட்டணம் ஏன்? என மக்கள் கேள்வி

News image

நல்லமுடி காட்சி முனை - from video grab

Updated On :13 ஜூலை 2026, 12:04 pm IST

வால்பாறை: வால்பாறையில், நல்லமுடி காட்சி முனைப் பகுதியில் அடிப்படை வசதிகள் ஏதும் செய்யப்படாமல், வனத்துறையினர் கட்டணம் வசூலிப்பது ஏன் என மக்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

வால்பாறை அடுத்துள்ள நல்ல முடி காட்சி முனை பகுதியில் சுற்றுலா பயணிகளிடம் நபர் ஒருவருக்கு நுழைவுக் கட்டணமாக 50 ருபாய் வீதம் வசூலிக்கிறார்கள் வனத்துறையினர். ஆனால், அங்கு அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை, பிறகு நுழைவுக் கட்டணம் எதற்கு என்று சுற்றுலா பயணிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

கோவை மாவட்டம் ஏழாவது சொர்க்கம் என்று அழைக்கப்படும் வால்பாறைக்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வெளிநாட்டினரும் அண்டை மாநிலமான பெங்களூர், பாண்டிச்சேரி, கேரளம் போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

வால்பாறை பகுதியில் சில்லென்ற காற்றும் சாரல் மழையும் பனிப்பொழிவும் குளிர்க் காற்றும் கண்டு ரசிக்க சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வருகின்றனர், குறிப்பாக வால்பாறை அடுத்துள்ள நல்லமுடி காட்சி முனை பகுதியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

வனத்துறை ஒரு நபருக்கு நுழைவு கட்டணமாக 50 ரூபாய் வசூலித்தும் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் கட்டணம் மட்டும் வசூலிப்பது வேதனையாக உள்ளது என்று சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர்.

இங்கு கழிப்பிட வசதியும் இல்லை, கார் பார்க்கிங் வசதியும் இல்லை என்றும் அடிப்படை வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை என குற்றம்சாட்டி வருகிறார்கள்.

மேலும், சுற்றுலா தளங்களில் அடிப்படை வசதி செய்து தர சுற்றுலா பயணிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Summary

Valparai Nallamudi Viewpoint why is there an entry fee? People ask

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.