வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

ஐஆர்சிடிசியின் சூப்பர் ஆன்மிகச் சுற்றுலா! கட்டணம், நாள்கள் என அனைத்து விவரங்களும்!!

ஐஆர்சிடிசி-யின் சூப்பர் ஆன்மிகச் சுற்றுலாவில் கட்டணம் முதல் எத்தனை நாள்கள் என்பது வரை அனைத்து விவரங்களும்

News image

ஆன்மிகச் சுற்றுலா - from X

Updated On :29 ஜூன் 2026, 3:30 pm IST

இந்திய ரயில்வேயில், 11 நாள்கள் ஆன்மிகச் சுற்றுலாவை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியிருக்கிறது. கிழக்கு மாநிலங்கள் உள்பட பல புகழ்பெற்ற கோயில்களுக்கும் சென்று வர இந்த வாய்ப்பை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பாரத் கௌரவ் டீலக்ஸ் சுற்றலா ரயில் மூலம் ஆன்மிக கிழக்கு கோயில்கள் சுற்றுலா மூலம், நாட்டின் புகழ்பெற்ற திருத்தலங்களை மிக எளிதாக தரிசித்து வரலாம்.

இந்த சுற்றுலா, செப்டம்பர் 25-ஆம் தேதி தில்லியிலிருந்து புறப்பட்டு, அக்டோபர் 5ஆம் தேதி தில்லி வந்தடைகிறது. இடையே, வாராணசி, புரி, புவனேஸ்வரம், கோனார்க், சிலிகா ஏரி, கொல்கத்தா, கங்காசாகர், தியோகரில் உள்ள வைத்தியநாத் தாம் உள்ளிட்ட இடங்களை தரிசிக்கலாம்.

இதற்கு எவ்வளவு கட்டணம், இது நமக்கு சரி வருமா என அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து விவரங்களும் கிடைத்திருக்கின்றன.

எத்தனை நாள்கள்?

செப்டம்பர் 25ஆம் தேதி சஃப்தார்ஜங் ரயில் நிலையத்திலிருந்து பாரத் கௌரவ் டீலக்ஸ் சுற்றுலா ரயில் மாலை 6.30 மணிக்கு வாராணசி நோக்கிப் புறப்படுகிறது. 11 நாள்களைக் கொண்டது.

  • வாராணசி - செப். 26ஆம் தேதி வாராணசி வரும். தங்குமிடம், சூரிய அஸ்தமணம், கங்கையில் படகுச் சவாரி, கங்கை ஆரத்தி. மறுநாள் காலை காசி விஸ்வநாதர் கோயில். இரவு ரயில் புரி புறப்படும்.

  • புரி - ஜெகந்நாதர் கோயில், புரி கடற்கரை மற்றும் உள்ளூர் இடங்கள்.

  • சில்லகா ஏரி - கோனார்க் - சில்லகா ஏரியில் படகு சவாரி, சூரியனார் கோயில் மற்றும் கடற்கரை.

  • புவனேஸ்வரம் - அடுத்து புவனேஸ்வரம் வருகிறது ரயில். ரகுராஜ்பூர் கிராமம், உதயகிரி, கந்தாகிரி குகை, லிங்கராஜ் கோயில் பார்க்கலாம்.

  • கொல்கத்தா - கொல்கத்தாவில் விக்டோரியா நினைவிடம், ஹுக்ளி ஆறு உள்ளிட்ட பல இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்படுவர்.

  • தியோகர்- நிறைவாக வைத்தியநாத் தாம் தரிசனம் கிடைக்கும். பிறகு ரயில் தில்லி நோக்கி திரும்பும். அக். 5 தில்லியில் பயணிகள் இறக்கிவிடப்படுவர்.

கட்டண விவரங்கள்

ஏசி முதல் வகுப்புக்கான 'சுப்பீரியர்' (Superior) தொகுப்புக்கான கட்டணம்:

தனி அறை - ஒருவருக்கு ரூ. 1,32,320; இருவர் பகிரும் அறையில் ஒருவருக்கு ரூ. 1,13,530; மூவர் பகிரும் அறையில் ஒருவருக்கு ரூ. 1,10,850; மற்றும் குழந்தைகளுக்கு ரூ. 1,04,095.

இரண்டாம் ஏசி வகுப்பிற்கான 'டீலக்ஸ்' (Deluxe) தொகுப்புக்கான கட்டணம்:

தனி அறை - ஒருவருக்கு ரூ. 1,24,930; இருவர் பகிரும் அறையில் ஒருவருக்கு ரூ. 1,06,145; மூவர் பகிரும் அறையில் ஒருவருக்கு ரூ. 1,03,460; மற்றும் குழந்தைகளுக்கு ரூ. 96,705.

மூன்றாம் ஏசி வகுப்பிற்கான 'கம்போர்ட்' (Comfort) தொகுப்புக்கான கட்டணம்:

தனி அறை - ஒருவருக்கு ரூ. 1,10,155; இருவர் பகிரும் அறையில் ஒருவருக்கு ரூ. 91,370; மூவர் பகிரும் அறையில் ஒருவருக்கு ரூ. 88,685; மற்றும் குழந்தைகளுக்கு ரூ. 81,930.

Story image

என்னென்ன அடங்கும்?

  • ஐந்து இரவுகள் 3 நட்சத்திர விடுதியில் தங்கும் வசதி, ஐந்து இரவுகள் ரயிலில் பயணம்.

  • சைவ காலை, மாலை, மதிய உணவுகள், தேநீர், தின்பண்டம் அனைத்தும்.

  • பயண காப்பீடு, நுழைவுக் கட்டணம், போக்குவரத்து என அனைத்தும் சேர்ந்தே இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

  • இதுபோன்ற ஆன்மிக சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தால், பக்தர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்று ஐஆர்சிடிசி தெரிவிக்கிறது.

Summary

IRCTC's Super Spiritual Tour! All details, from the fare to the duration!!

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.