மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

விஜய்யின் குதிரை பேர அரசியல்: ஆளுநர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவோம்!

தவெக அரசின் குதிரைபேர ஊழல் பற்றி திமுக சார்பில் ஆளுநரிடம் மீண்டும் புகார் அளிக்கபட்டது தொடர்பாக ஆர். எஸ். பாரதி...

News image

திமுக அமைப்புச்செயலர் ஆர். எஸ். பாரதி.

Updated On :13 ஜூலை 2026, 2:39 pm IST

குதிரை பேர புகாரின் பேரில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவோம் என்று திமுக அமைப்புச்செயலர் ஆர். எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

தவெக அரசின் குதிரைபேர ஊழல் பற்றி திமுக சார்பில் ஆளுநரிடம் மீண்டும் புகார் அளிக்கபட்டது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், கரூரில் முதல்வர் விஜய் பேசியது தொடர்பாக உச்ச நீதிமன்ற வழிகாட்டல் படி ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக் குழுவிடமும், சிபிஐயிடமும் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் விஜய் குதிரைபேர ஊழல் ஈடுபட்டு உள்ளார் என்பதை வைகோ அளித்த வாக்குமூலம் அடிப்படையில் ஏற்கனவே கடந்த 4 ஆம் தேதி ஆளுநரை சந்தித்து ஆதாரத்தோடு புகார் அளித்தோம்.

அதேபோல விஜய பாஸ்கரும் வெளிப்படையாகவே செய்தியாளர் கூட்டத்திலே என்னை தவெக வில் வந்து சேரும்படி கேட்டுக்கொண்டார்கள் ஆகவேதான் நான் ராஜினாமா செய்கிறேன் என்று சொல்லி எம். எல். ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவரும் சேர்ந்துவிட்டார். ஆக இதெல்லாம் குதிரைபேர ஊழலுக்கு தகுந்த ஆதாரங்கள் என்பதை சுட்டிக்காட்டி ஆளுநரிடத்தில் இன்று மீண்டும் ஒருமுறை திமுகவின் சார்பில் புகார் கொடுத்திருக்கிறோம். விஜய் பேசும் போது கொத்து பரோட்ட என்றெல்லாம் கொச்சையாக பேசுகிறார்.

கரூர் விஜய பாஸ்கர், விராலிமலை விஜயபஸ்கர் ஆகிய இருவருமே நாங்கள் சாப்பிட்டுப் போட்ட இரண்டு இலை தான் அதை தவெக வில் இணைத்துக் கொண்டுள்ளனர் என அதிமுகவினரே விமர்சித்து உள்ளனர். அதில் ஏற்கெனவே வெளியிட்ட கரூர் அறநிலையத்துறை நிலம் தொடர்பான அரசாணையை ஏதோ இவரிடம் கோரிக்கை வைத்து அதன் பிறகு வெளிடுவது போல ஒரு நாடகத்தை நடத்தி காட்டியுள்ளார். இந்த நாடகம் நடந்தது 10ஆம் தேதி ஆனா 9 ஆம் தேதியே அதற்கான அரசாணை போடப்பட்டுவிட்டது.

இது எவ்வளவு பெரிய பித்தலாட்டம் எவ்வளவு பெரிய நாடகம். ஆக இப்படிப்பட்ட நாடகங்களை இவர்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் முடிவுகட்டுகிற வகையில் திமுக நடவடிக்கை எடுக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். குதிரை பேர புகாரின் பேரில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவோம் என்றார்.

Summary

DMK Organizing Secretary R.S. Bharathi has stated that they will approach the court if the Governor fails to take action regarding the horse-trading complaint.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.