மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் சார்பில் தில்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் "பாரத் டெக்ஸ் 2026' சர்வதேச ஜவுளி கண்காட்சி மற்றும் மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் எம். விஜய் பாலாஜி, எஸ். கீர்த்தனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் மிக முக்கிய உலகளாவிய ஜவுளி நிகழ்வாக ஜூலை 14 முதல் 17-ஆம் தேதிவரை நடைபெறவுள்ள“பாரத் டெக்ஸ் 2026” கண்காட்சி மற்றும் மாநாடு கருதப்படுகிறது. இதை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் "பாரத் டெக்ஸ்' வர்த்தகக் கூட்டமைப்பு (பிடிடிஎஃப்) இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இக்கண்காட்சியில் 130-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 6,000-க்கும் அதிகமான கொள்முதல் செய்வோரும், 1.3 லட்சத்துக்கும் அதிகமான வர்த்தகப் பார்வையாளர்களும் பங்கேற்றுள்ளனர். மேலும், 20,000-க்கும் மேற்பட்ட ஜவுளிப் பொருள்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இது, நம்பகமான உலகளாவிய கொள்முதல் மையமாகவும், நிலையான, சுற்றுச்சூழல் நட்பு மற்றும் புதுமை சார்ந்த ஜவுளித் துறையில் இந்தியாவின் முக்கியத்துவத்தையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார்.
முன்னதாக, ஜூலை 14-ஆம் தேதி நடைபெற்ற கண்காட்சியின் தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்குடன், மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா, துறைச் செயலர் நீலம் ஷமி ராவ், பாரத் டெக்ஸ் விழா ஏற்பாட்டுக் குழுத் தலைவர் நரேன் கோயங்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழாண்டு கண்காட்சியின் தேசிய முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், மத்திய பிரதேசம், பிகார், உத்தர பிரதேசம், பஞ்சாப், மகாராஷ்டிரம், குஜராத், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய 8 மாநிலங்கள் "ஆதரவு மாநிலங்களாக' பங்களிப்பை வழங்கியுள்ளன.
இவற்றுடன் ஆந்திரம், அஸ்ஸôம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஜம்மு-காஷ்மீர், ஒடிஸô, மணிப்பூர், ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தொழில் உள்கட்டமைப்பு, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் கொள்கை ஆதரவை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளன.
இந்நிகழ்வில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தமிழக அரசு சார்பில் மாநில கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை அமைச்சர் எம். விஜய் பாலாஜி, தமிழக தொழில்துறை, முதலீட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா, மாநில கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை முதன்மைச் செயலர் தி.ந. வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக அரங்குகளைப் பார்வையிட்டனர்.
தமிழகத்தில் ஜவுளி தொழில் வாய்ப்புகள்: தொழில்முனைவோரிடம் அரசு விளக்கம்
தமிழ்நாட்டின் ஜவுளித் துறையில் முதலீடு செய்ய விரும்பும் பெரும் முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கில் தில்லி பாரத் டெக்ஸ் 2026 கண்காட்சி வளாகத்தில் விரிவான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள், முதன்மைச் செயலர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டின் ஜவுளி மற்றும் ஆடைத்துறையில் நிலவும் முதலீட்டு வாய்ப்புகள், உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகள், ஏற்றுமதி மேம்பாடு, மதிப்புக்கூட்டப்பட்ட உற்பத்தி, திறன் மேம்பாடு மற்றும் புதிய தொழில்முனைவோரை ஈர்ப்பதற்கான தமிழக அரசின் பல்வேறு கொள்கை முயற்சிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், தமிழ்நாட்டின் முதலீட்டாளர் நட்பு சூழல், உலகத்தரம் வாய்ந்த மனித வளம், விரைவான நிர்வாக ஆதரவு ஆகியவை குறித்து தொழில்முனைவோரிடம் விளக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கோ-ஆப்-டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் இன்னசென்ட் திவ்யா, தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநர் பி. உமாமகேஸ்வரி, சிப்காட் தலைமைச் செயல் அலுவலர் கேதரின் சரண்யா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தித் துறையில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணி மாநிலமாக விளங்குவதையும், புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் மாநில அரசு காட்டும் தீவிர ஆர்வத்தையும் இம்மாநாடு சர்வதேச முதலீட்டாளர்களிடையே பறைசாற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாரத் டெக்ஸ் கண்காட்சி: உலக ஜவுளி வா்த்தகத்தில் இந்தியாவின் முன்னணி நிலையை மேலும் உறுதிப்படுத்தும்

முதல்வரும் ஆளுநரும் ஆழமான புரிதலோடு செயல்படுகிறார்கள்: அமைச்சர் விஸ்வநாதன்

அனைவரும் ஆரோக்கியத்தை மேம்படுத்த நாள்தோறும் நேரம் ஒதுக்க வேண்டும்: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா






