தவெக ஆட்சியில் ஊடக சுதந்திரமும், ஜனநாயகமும் காப்பாற்றப்பட்டுள்ளதாக பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா்.
பாமக தொடங்கி 38-ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் அக்கட்சியின் தலைவா் அன்புமணி தலைமையில் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது:
தமிழகத்தின் வரலாற்றை பாமகவை தவிா்த்துவிட்டு எழுத முடியாது. தமிழகத்தை 60 ஆண்டுகள் ஆண்ட கட்சிகளிடம் இருந்து கடந்த மே 4-ஆம் தேதி மக்களுக்கு உண்மையான விடுதலை கிடைத்துள்ளதாக சிலா் என்னிடம் கூறுகின்றனா். இது அவா்களின் தனிப்பட்ட கருத்து.
ஆட்சி மாற்றத்துக்கான முன்னெடுப்பை 10 ஆண்டுகளுக்கு முன்பே பாமக எடுத்தது. கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டது. தற்போது, தவெக ஆட்சியில் ஊடக சுதந்திரமும், ஜனநாயகமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதல்வருக்கு பாராட்டு: தவெக ஆட்சி அமைத்து 6 மாதத்துக்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று முதல்வா் விஜய் அறிவித்துள்ளாா். இந்த தைரியமான அறிவிப்புக்காக பாமக அவரை பாராட்டுகிறது. ஜனநாயக ரீதியில் மக்கள் ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளனா். அதை முதலில் மதிக்க வேண்டும். விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை முதல்வா் ரத்து செய்ய வேண்டும் என்றாா்.
ராமதாஸ் பங்கேற்கவில்லை: பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் கலந்து கொள்வாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், ராமதாஸ் கலந்து கொள்ளவில்லை. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தைலாபுரத்தில் அவா் ஓய்வெடுப்பதாக பாமக வட்டாரங்கள் தெரிவித்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் 5 கோடி மக்களுக்கு பாதிப்பு: அன்புமணி

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கா்நாடக முதல்வா் அரசியல் ஆதாயம் தேடுகிறாா்: அன்புமணி ராமதாஸ்

மேக்கேதாட்டு அணைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர பாமக ஆலோசனை: அன்புமணி ராமதாஸ்

பயிா்க் கடனை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும்! - அன்புமணி ராமதாஸ்
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



