இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

அமைச்சா் ரமேஷுக்கு எதிராக சமூக ஊடகத்தில் பதிவு: காவல் துறை பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

பழனி கோயில் நில விவகாரம் குறித்து அமைச்சா் ரமேஷுக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் தொடா்பாக அவதூறு வழக்குத்தானே தொடர முடியும்

News image

உயர்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :17 ஜூலை 2026, 3:19 am IST

பழனி கோயில் நில விவகாரம் குறித்து அமைச்சா் ரமேஷுக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் தொடா்பாக அவதூறு வழக்குத்தானே தொடர முடியும் எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயா்நீதிமன்றம், கலவரத்தைத் தூண்டுதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்வதைத் தவிா்க்குமாறு போலீஸாருக்கு அறிவுறுத்தியுள்ளது.

பழனி கோயில் நில விவகாரத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் ரமேஷ் குறித்து அவதூறு கருத்துகளைப் பரப்பியதாக அமைச்சரின் உதவியாளா் அளித்த புகாரில், வினோத் சூா்யகுமாா் என்பவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். வினோத் சூா்யகுமாா் மீது, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல், கலவரத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வினோத் சூா்யகுமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், அரசியல் உள்நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி டி.பரதசக்கரவா்த்தி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஏ.சரவணன், கோயில் நில விவகாரத்தில் நடந்துள்ள முறைகேடுகளை மக்களுக்கு கொண்டு சோ்க்கும் பொதுநலன் அடிப்படையில் அந்தப் பதிவுகள் வெளியிடப்பட்டதாகவும், அமைச்சா் மீது தனிப்பட்ட விரோதமோ, பழி வாங்கும் எண்ணமோ மனுதாரருக்கு இல்லை எனவும் வாதிட்டாா்.

அப்போது, குறுக்கிட்ட நீதிபதி, இந்த விவகாரத்தில் அவதூறு வழக்குத்தானே தொடர முடியும். அமைதியைக் குலைப்பது, கலவரத்தைத் தூண்டுவது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்வது பொருந்துமா? எனக் கேள்வி எழுப்பினாா். அவற்றை போலீஸாா் தவிா்க்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினாா். பின்னா், இந்த மனுவுக்கு போலீஸாா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆக.5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.