பழனி தண்டாயுதபாணி கோயிலுக்குச் சொந்தமான நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் விரிவான விசாரணை தேவைப்படுகிறது. இதில் நிறையே பேரின் தொடர்புகள் உள்ளது என மதுரையில் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
இதுபோல, கடந்த 5 ஆண்டுகளில் எந்த நிலமாக இருந்தாலும் போலியாக பதிவு செய்திருந்தால் மக்கள் புகாரளிக்கலாம் எனவும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சி சிம்மக்கல் பகுதியில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் விழுதுகள் ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தினை அமைச்சர் நிர்மல் குமார் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையாளர் கௌரவ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஒப்பந்த மின்வாரிய பணியாளர்கள் போராட்டம் குறித்த கேள்விக்கு, டிஎன்பிஎஸ்சி மூலமாகதான் மின்வாரிய பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர் என்றார்.
பழனி நில விவகாரம் குறித்த கேள்விக்கு, பழனி வழக்கில் விரிவான விசாரணை தேவைப்படுகிறது. நிறையே பேரின் தொடர்புகள் உள்ளது என்பது என் கணிப்பாக உள்ளது. பல போலி பத்திரங்கள் 5 ஆண்டுகளில் நடந்துள்ளது. இது தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். நிறைய இடத்தில் சட்டவிரோத பதிவுகள் நடந்துள்ளது. போலி பத்திரப்பதிவுகள் நடந்துள்ளது. ஆனால், ஒன்றாவது கடந்த ஆட்சியில் சிபிசிஐடி விசாரணை சென்றுள்ளதா? பழனி கோவில் நில விவகாரத்தில் நுணக்கமாக விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
5 ஆண்டுகளில் போலியாக பதிவு செய்திருந்தால் பொதுமக்கள் புகாரளிக்கலாம். இது கிரிமினல் வழக்கு, அரசு நிலங்களை அரசுக்கு தெரியாமல் பதிவு செய்துள்ளனர் என்றார்.
பாமகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என்றும், அரசியல் படுத்துதல் என்பது ஆள்புடிக்கிற வேலை இல்லை என்பது குறித்து திருமா பேசியது திமுகவை தான். குதிரை பேர விவகாரத்தில் பல கோடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சென்னையில் இருக்கும்போது அறிவாலயம் போகமாட்டார். லண்டனில் இருந்து மாவட்ட செயலாளர் மீட்டிங் நடத்தும் அளவிற்கு கட்சி உள்ளது. திமுக கூட்டணி கட்சியால்தான் கடந்த ஆண்டுகளில் ஆட்சியமைக்க முடிந்தது. திமுக எப்போதும் தனியாக நின்று 50 சீட்டுகள் கூட வாங்க முடியாது. பதவிக்கும் கட்சியில் சேருவதற்கும் தொடர்பு இல்லை.
ஆர்பி உதயகுமார் ஒரே கட்சியில் 5 நிலைப்பாடு எடுக்கக் கூடியவர் பொதுச்செயலாளர் ஆர்பி உதயகுமார் அதிமுக பொதுச்செயலாளராக முயற்சிக்கிறார் என்றும் நிர்மல் குமார் விமர்சித்துள்ளார்.
Summary
Palani land irregularities revealed in detailed inquiry! Minister C.T.R. Nirmal Kumar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK
பாஜகவுடன் திமுக - அதிமுக கூட்டணி! 4 பேருக்கு மத்திய அமைச்சர் பதவி! - நிர்மல் குமார்

கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் நிர்மல் குமார்!

அதிமுக அழிந்ததற்கு EPS-தான் காரணம்! அமைச்சர் நிர்மல் குமார்
விடியோக்கள்

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk



