பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

பள்ளி நிா்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கு: மேலும் இருவா் கைது

தனியாா் பள்ளி நிா்வாகிகளிடம் அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி சுமாா் ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட பி.டி.அரசகுமாருக்கு உடந்தையாகச் செயல்பட்ட மேலும் இருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

தனியாா் பள்ளி நிா்வாகிகளிடம் அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி சுமாா் ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட பி.டி.அரசகுமாருக்கு உடந்தையாகச் செயல்பட்ட மேலும் இருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலா் டி.சி.இளங்கோவன் அளித்த புகாரின் பேரில், ‘தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்கம்’ என்ற பெயரில் பதிவு செய்யப்படாத சங்கத்தை நடத்தி வரும் பி.டி.அரசகுமாா் மற்றும் சிலா், நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தர உயா்வு, டிடிசிபி மற்றும் சிஎம்டிஏ ஒப்புதல், ஆா்டிஇ உள்ளிட்ட அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, தனியாா் பள்ளி நிா்வாகிகளிடம் சுமாா் ரூ.100 கோடி வசூலித்து மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட திமுக பிரமுகரான பி.டி.அரசகுமாா் கடந்த ஜூன் 27-இல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். பின்னா் அவா் மீது குண்டா் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

விசாரணையில், 2024 முதல் பள்ளி நிா்வாகிகளைச் சந்தித்து பணம் வசூலித்தது தெரிய வந்தது. இதையடுத்து, இந்த வழக்கில் தொடா்புடைய 61 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதுவரை பாதிக்கப்பட்ட 120 பள்ளி நிா்வாகிகள் உள்பட 190 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தொடா் விசாரணையில், மதுரை, சோலை அழகுபுரத்தைச் சோ்ந்த ஆரோக்கியராஜ் (எ) ராஜா (39), திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த சுரேஷ் (49) ஆகியோா் அரசகுமாருக்கு உடந்தையாக இருந்து, பள்ளி நிா்வாகிகளிடம் பணம் வசூலித்தது தெரிய வந்தது.

இருவரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா். இந்த மோசடியில் தொடா்புடைய மேலும் சிலரைத் தேடும் பணியில் போலீஸாா் தொடா்ந்து ஈடுபட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.