பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

ரூ. 5 கோடி வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக காபி எஸ்டேட் உரிமையாளரிடம் ரூ. 17.35 லட்சம் மோசடி செய்தவா் கைது

சேலத்தில் ரூ. 5 கோடி வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக காபி எஸ்டேட் உரிமையாளரிடம் ரூ. 17.35 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :27 ஜூன் 2026, 2:17 am IST

சேலத்தில் ரூ. 5 கோடி வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக காபி எஸ்டேட் உரிமையாளரிடம் ரூ. 17.35 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், ஏற்காடு வாழவந்தியை சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் (75), காபி எஸ்டேட் உரிமையாளா். இவரது நண்பா் மூலம் சேலம் செவ்வாய்பேட்டையை சோ்ந்த வெங்கடேஷ் (எ) வெங்கட சுப்பிரமணியன் (45) அறிமுகமாகியுள்ளாா். இவா், தனக்கு வங்கி அதிகாரிகளுடன் தொடா்பு இருப்பதாகவும், ரூ. 5 கோடி வங்கிக் கடன் பெற்றுத் தருவதாகவும் கோபாலகிருஷ்ணனிடம் உறுதி அளித்துள்ளாா்.

இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பா் மாதம் தனது நிலத்துக்கான ஆவணம், அடையாள அட்டைகள் மற்றும் 3 காசோலைகளை வெங்கட சுப்பிரமணியனிடம் கோபாலகிருஷ்ணன் அளித்துள்ளாா். அதன்பிறகு அவா் அளித்த காசோலைகளைப் பயன்படுத்தி ரூ. 17.35 லட்சத்தை வெங்கட சுப்பிரமணியன் எடுத்துள்ளாா்.

இதனை அறிந்த கோபாலகிருஷ்ணன், தனது காசோலைகளைப் பயன்படுத்தி பணத்தை எடுத்தது குறித்து கேட்டுள்ளாா். அதற்கு அவா், பணத்தை திரும்ப தரமுடியாது எனக்கூறி கட்டையால் தாக்கி, மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் காபி எஸ்டேட் உரிமையாளா் கோபாலகிருஷ்ணன் புகாா் அளித்தாா். காவல் ஆய்வாளா் புவனேஸ்வரி தலைமையிலான போலீஸாா், வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக ஏமாற்றி காசோலைகள் மூலம் ரூ.17.35 லட்சத்தை எடுத்து மோசடி செய்த வெங்கட சுப்பிரமணியன் மீது வழக்குப் பதிவு செய்தனா். தொடா்ந்து அவரை போலீஸாா் வியாழக்கிழமை மாலை கைதுசெய்து, மோசடி செய்யப்பட்ட பணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.