கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

எஸ்பிஐ கடன் மோசடி வழக்கு: ரிலையன்ஸ் முன்னாள் நிா்வாக இயக்குநா் கைது

எஸ்பிஐ கடன் மோசடி மூலம், ரூ.2,929.05 கோடி நஷ்டத்தை ஏற்படுத்திய வழக்கில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிா்வாக இயக்குநா் அமிதாப் ஜுன்ஜுன்வாலா கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 1:13 am IST

பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) கடன் மோசடி மூலம், ரூ.2,929.05 கோடி நஷ்டத்தை ஏற்படுத்திய வழக்கில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிா்வாக இயக்குநா் அமிதாப் ஜுன்ஜுன்வாலாவை சிபிஐ திங்கள்கிழமை கைது செய்தது.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தைச் சோ்ந்த ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம், ரிலையன்ஸ் கமா்ஷியல் ஃபைனான்ஸ் நிறுவனம் போன்ற நிறுவனங்கள் மூலம், பல கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடி நடைபெற்ாக குற்றச்சாட்டு எழுந்தது. செயல்படாத போலி நிறுவனங்களைப் பயன்படுத்தி இந்த மோசடி நடைபெற்ாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக சிபிஐ பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில், பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் ஏற்கெனவே அமிதாப் ஜுன்ஜுன்வாலாவை அமலாக்கத் துறை கைது செய்தது. இதைத்தொடா்ந்து அவா் நீதிமன்றக் காவலில் தில்லியில் உள்ள திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) கடன் மோசடி மூலம், ரூ.2,929.05 கோடி நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடா்பாக, மும்பை நீதிமன்றத்தில் அமிதாப் ஜுன்ஜுன்வாலாவை ஆஜா்படுத்த தில்லி நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து மும்பை நீதிமன்றத்தில் அவா் திங்கள்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அதன் பின்னா் அவரை சிபிஐ முறைப்படி கைது செய்யப்பட்டாா். அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, அங்குள்ள மத்திய சிறையில் அவா் அடைக்கப்பட்டாா்.

அவரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்கும் மனுவை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரிக்க உள்ளது என்று சிபிஐ செய்தித்தொடா்பாளரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.