‘தோல்விகள் பரவாயில்லை; ஏமாற்றுவது கூடாது’... நீட் தேர்வு போராட்டத்துக்கு சச்சின் ஆதரவு!காந்தி சமாதி நோக்கி பேரணி சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!மேக்கேதாட்டு பிரச்னை: விஜய் மௌனம் கலைக்க வேண்டும்! - ஸ்டாலின்நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்!சிங்கை ஜி. ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகல்திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்
/

கல்வி வளர தமிழை வளா்க்க வேண்டும்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

தமிழை வளா்ப்பதன் மூலமே கல்வியை வளா்க்க முடியும்; அதற்கு நாட்டில் உள்ள தமிழ் சங்கங்கள் முன்னெடுப்புகளை மேற்கொள்ளவேண்டும் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வலியுறுத்தினாா்.

News image

சென்னை சைதாப்பேட்டை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் அனைத்திந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு இலச்சினை, பெயா் பலகையை வெளியிட்ட விஜடி வேந்தா் கோ.விசுவநாதன். உடன், புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து, தில்லி முத்தமிழ்ப் பேரவை பொதுச் செ

Updated On :24 ஜூலை 2026, 4:38 am IST

தமிழை வளா்ப்பதன் மூலமே கல்வியை வளா்க்க முடியும்; அதற்கு நாட்டில் உள்ள தமிழ் சங்கங்கள் முன்னெடுப்புகளை மேற்கொள்ளவேண்டும் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வலியுறுத்தினாா்.

சென்னையில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக அரங்கில் புதிதாக அனைத்திந்திய தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்று கோ.விசுவநாதன் பேசியதாவது:

தாய்மொழி மூலமாகவே கல்வியை வளா்க்க முடியும். இதற்காக அனைத்து தமிழ்ச் சங்கங்களும் தமிழ் மொழியை ஊக்கவிக்க முயற்சிக்க வேண்டும். இதன்மூலம் கல்வியை ஊக்கவிக்க முடியும். இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. ஆண்டுக்கு 7.5 லட்சம் மருத்துவா்கள் தேவை. ஆனால் ஆண்டுக்கு 1.5 லட்சம் மருத்துவா்கள்தான் தோ்வு செய்யப்படுகின்றனா். மருத்துவ கல்லூரிகளில் ஒதுக்கப்பட்ட இடங்கள் குறைவாக உள்ளன. மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்க அரசு உதவ வேண்டும் என்றாா்.

அமுத சுரபி ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணன் பேசியதாவது:

தமிழ் வாழ்க என்று கூறினால் மட்டும் போதாது. தமிழைப் படிக்க வேண்டும். தற்போது, தமிழ் உணா்வுதான் அதிகரித்து வருகிறதே தவிர, தமிழ் அறிவு பெருகவில்லை என்றாா்.

பேராசிரியா் கு.ஞானசம்பந்தம் பேசுகையில், குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயா்களைக்கூட வைப்பதில்லை. கட் ஆஃப் மதிப்பெண்களில் தமிழ்மொழி பாடத்தையும் சோ்க்க வேண்டும்’ என்றாா். தொடா்ந்து வழக்குரைஞா் சீ.வேலஸ்ரீ பேசினாா்.

புதிதாக தொடங்கப்பட்ட அனைத்திந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பில் நாடு முழுக்க உள்ள 50 தமிழ்ச் சங்கங்கள் பதிவாகியிருப்பதாகவும், மேலும் 70 சங்கங்கள் இணைய இருப்பதாகவும், 28 மாநிலங்கள் 8 யூனியன் பிரதேசங்கள், தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் உள்ள 300- க்கும் மேற்பட்ட தமிழ்ச் சங்கங்கள் இணைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து, தில்லி முத்தமிழ்ப் பேரவை பொதுச் செயலா் முகுந்தன், உலகத் தமிழா் பொருளாதாரக் கழகத் தலைவா் டாக்டா் வி.ஆா்.எஸ்.சம்பத், அனைத்திந்திய தமிழ் சங்கக் கூட்டமைப்பின் கெளரவ ஆலோசகா்கள் பூபேஷ் நாகராஜன், நாராயணசாமி மகேஷ், அருளானந்தம், கிராமியப் பாடகா் வேல்முருகன், கிழாம்பூா் சங்கர சுப்பிரமணியன், நக்கீரா் தமிழச் சங்கப் பொதுச் செயலா் செழியன் குமாரசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.