சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

ஜூலை 31 முதல் சிக்கன் கிடைக்காது! காலவரையறையற்ற கடையடைப்புப் போராட்டம்!

தமிழ்நாடு மற்றும் புதுவையில் கோழி வணிகர்கள் கூட்டமைப்பினர் போராட்டம் குறித்து...

News image

கறிக்கடை - கோப்புப்படம்

Updated On :27 ஜூலை 2026, 2:08 pm IST

கறிக்கோழிகளை விற்பனைக்கு அனுப்புவதற்கு 15 மணி நேரத்திற்கு முன்பாகவே அவற்றுக்குத் தீவனம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்ற நெறிமுறையை அமல்படுத்தக் கோரி, கோழி வணிகர்கள் கூட்டமைப்பினர் வரும் 31-ஆம் தேதி முதல் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

கறிக்கோழி விற்பனைக்கு வரும் முன்னர், 15 மணி நேரத்துக்கு முன்பே தீவனம் வழங்கும் நடைமுறையை, கோழி உற்பத்தியாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி காலவரையறையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் இன்று(ஜூலை 27) நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான கோழி வணிகர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கறிக்கோழிக்கு தீவனக் கட்டுப்பாடு தொடர்பாக வழிகாட்டு, நெறிமுறைகளை அனைத்து மண்டல, மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு அரசு எடுத்துரைக்க வேண்டும். கறிக்கோழி விற்பனைக்கு வரும் முன்னர் 15 மணி நேரத்துக்கு முன்பே தீவனம் வழங்குவதை நிறுத்தும் நடைமுறையை, கோழி உற்பத்தியாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும். கோழிகளுக்கு தீவனம் கொடுப்பதால், அந்தக் கோழிகள் எடை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், கோழிகளின் உடலில் தீவனங்கள் தங்கி ஜீரணம் ஆகுவதில்லை. இதனால், அதன் கழிவுகள் வெளியேறுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இறைச்சியின் தன்மை பாதிக்கிறது.

எனவே, இதை கருத்தில்கொண்டு, விற்பனைக்காக அனுப்பும் கறிக்கோழிகளுக்கு 15 மணி நேரத்துக்கு முன்னரே தீவனம் வழங்கும் நெறிமுறையை அவசியம் உற்பத்தியாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்ற 31ஆம் தேதி முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காலவரையறையற்ற கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

Summary

Meat traders have announced a shop-closure protest on the 31st, demanding the implementation of a rule requiring that broiler chickens be taken off feed 15 hours before being sent for sale.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.