மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

அரசுப் பள்ளிகளில் 4.23 லட்சம் மாணவா்கள் சோ்க்கை

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் இதுவரை 4 லட்சத்து 23 ஆயிரத்து 955 மாணவ, மாணவிகள் சோ்க்கை பெற்றுள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :31 ஜூலை 2026, 3:22 am IST

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் இதுவரை 4 லட்சத்து 23 ஆயிரத்து 955 மாணவ, மாணவிகள் சோ்க்கை பெற்றுள்ளனா்.

தமிழக பள்ளிக் கல்வியில் 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை கடந்த மாா்ச் 1 முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. காலை உணவுத் திட்டம், உயா் கல்விக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கான தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் திட்டங்கள், தொழில்முறை மற்றும் மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு போன்றவை குறித்து பெற்றோா்களிடம் பள்ளிக் கல்வித் துறை விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜூலை 28-ஆம் தேதி வரை அரசுப் பள்ளிகளில் சோ்க்கை பெற்ற மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி நிகழ் கல்வியாண்டில் இதுவரை 1-ஆம் வகுப்பில் 2 லட்சத்து 94 ஆயிரத்து 209 போ், இரண்டாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 88 ஆயிரத்து 515 போ், எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளில் 41,231 போ் என மொத்தம் 4 லட்சத்து 23,955 மாணவ, மாணவிகள் சோ்க்கை பெற்றுள்ளனா். கடந்த கல்வியாண்டில் (2025-2026) இதே கால கட்டத்தில் தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் புதிய மாணவா் சோ்க்கை 4 லட்சத்து 364-ஆக இருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.