காவிரி விவகாரம் தொடா்பாக தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
காவிரி நீா் ஒழுங்காற்றுக்குழு ஆணையிட்ட பிறகும் கூட காவிரியில் நீா் திறந்துவிடாத கா்நாடக அரசின் தமிழா் விரோதப் போக்கு அதிா்ச்சியளிக்கிறது. கா்நாடக அரசின் இப்போக்கு கண்டனத்துக்குரியது. இதனால், தமிழக டெல்டா பகுதி முழுவதும் விவசாயம் பாதிக்கப்பட்டுப் பாலைவனமாக மாறிவிடும் ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழகம் சாா்பில் நமது நியாயமான குரலை உரத்து வெளிப்படுத்த வேண்டும். இச்சூழலில், தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் தொல்.திருமாவளவன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சமூக நீதித் துறைக்கு கூடுதல் நிதி வரவேற்கத்தக்கது: தொல். திருமாவளவன்

தி.க. பரப்புரைக்கு அரசு அனுமதிக்க வேண்டும்: தொல். திருமாவளவன்
நமது தமிழ் தேசியம் முற்றிலும் மாறானது: தொல். திருமாவளவன்
உயிரிழந்தவா் குடும்பத்துக்கு அரசு வேலை: திருமாவளவன் வரவேற்பு
விடியோக்கள்

உங்களுக்கும் சிபிஐ வழக்கு இருக்கு! Udhayanidhi Vs N Anand! | TN Assembly



