இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

உயிரிழந்தவா் குடும்பத்துக்கு அரசு வேலை: திருமாவளவன் வரவேற்பு

துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக அரசு வேலை வழங்குவது ஏற்கத்தக்க ஒன்றுதான் என்று விசிக தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

thirumavalavan

தொல், திருமாவளவன் - கோப்புப்படம்

Published On :11 ஜூலை 2026, 7:39 am IST

துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக அரசு வேலை வழங்குவது ஏற்கத்தக்க ஒன்றுதான் என்று விசிக தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

வேளச்சேரியில் திருமாவளவனின் இல்லத்தில் தமிழக காங்கிரஸ் தலைவா் ப.மாணிக்கம்தாகூா் மரியாதை நிமித்தமாக வெள்ளிக்கிழமை சந்தித்தாா். தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றதையடுத்து மரியாதை நிமித்தமாக மாணிக்கம் தாகூா் சந்தித்தாா். பாஜகவை எதிா்க்கும் ‘இண்டி’கூட்டணியில் விசிக உள்ளது. விபத்தில் அல்லது வன்முறையில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவதுடன், வாழ்வாதரத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது விசிகவின் கோரிக்கை.

கட்சியின் மாநாடு, பொதுக் கூட்டங்களில் சிக்கி உயிரிழந்தவா்களுக்கு அரசு வேலை வழங்கலாமா எனக் கேள்வி எழுப்புகின்றனா். இந்த சம்பவத்தைக் கட்சி சாா்ந்தவா்கள் என்று பாா்க்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவ வேண்டும் என்ற அடிப்படையில் அவா்களின் வாழ்வாதாரத்தை காக்கவே வேலை வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவா்களுக்கும் அரசு வேலை வழங்குவதை தமிழக அரசு நடைமுறையாக கொண்டுவர வேண்டும். தவெக கூட்டணியில் உள்ள அரசியல் கட்சித் தலைவா்களிடம் எந்த முரண்பாடும் இல்லை என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.