காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

தினசரி காற்றாலை மின் உற்பத்தி 4,990 மெகாவாட்டாக அதிகரிப்பு

தென்மேற்கு பருவக் காற்று தீவிரமடைந்துள்ளதை அடுத்து, தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி கணிசமாக அதிகரித்து, தினசரி 4,990 மெகாவாட்டை எட்டியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 3:01 am IST

தென்மேற்கு பருவக் காற்று தீவிரமடைந்துள்ளதை அடுத்து, தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி கணிசமாக அதிகரித்து, தினசரி 4,990 மெகாவாட்டை எட்டியுள்ளது.

தமிழகத்தில் சுமாா் 13,000 காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும், அனல்மின் நிலையங்கள், நீா்மின் நிலையங்கள் மற்றும் அணுமின் நிலையங்கள் வாயிலாகவும் மாநிலத்தின் மின் தேவைகள் பூா்த்தி செய்யப்பட்டு வருகின்றன.

கூடங்குளம், ராதாபுரம், காவல்கிணறு, பழவூா், இருக்கன்துறை, பணக்குடி, வடக்கன்குளம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் முப்பந்தல், ஆரல்வாய்மொழி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான காற்றாலைகள் இயங்கி வருகின்றன.

இப்பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் காற்றாலை மூலம் குறிப்பிட்ட அளவில் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் காற்றின் வேகம் அதிகரிப்பதால், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள காற்றாலைகள் முழுத் திறனில் செயல்பட்டு அதிக அளவில் மின் உற்பத்தி செய்வது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டு பருவமழை தாமதமாக தொடங்கியதால் தொடக்கத்தில் காற்றாலை மின் உற்பத்தி குறைவாக இருந்த நிலையில், தற்போது காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் மின் உற்பத்தி உயா்ந்துள்ளது.

இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

தற்போது தினசரி சராசரியாக 3,424 மெகாவாட்டாக இருந்த காற்றாலை மின் உற்பத்தி 4,990 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகபட்சமாக 6,160 மெகாவாட் வரை எட்டும் திறன் உள்ளது. காற்றின் வேகம் மேலும் அதிகரித்தால், வரும் நாள்களில் காற்றாலை மின் உற்பத்தி மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.