மக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!3வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச் சந்தை: சென்செக்ஸ் 166 புள்ளிகள் உயர்வு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!முதல்வர் விஜய் கர்நாடகம் வர வேண்டாம்! டி.கே. சிவகுமார் வேண்டுகோள்!
/

காவலர்களுக்குப் பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்!

காவல் துறையில் சிறந்து விளங்கியோருக்கு பதக்கங்கள் வழங்கி முதல்வர் விஜய் கௌரவித்தார்.

News image

பதக்கங்களை வழங்கும் முதல்வர் விஜய்.

Updated On :31 ஜூலை 2026, 7:46 pm IST

காவல் துறையில் சிறந்து விளங்கியோருக்கு பதக்கங்கள் வழங்கி முதல்வர் விஜய் கௌரவித்தார்.

காவல் துறையில் சிறந்து விளங்கியோருக்கு குடியரசுத் தலைவர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் முதல்வர் பதக்கங்கள் வழங்கும் நிகழ்வு சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் முதல்வர் விஜய் பட்டு வேஷ்டி சட்டையுடன் கலந்துகொண்டு காவல் அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து பல்வேறு பிரிவினரின் சாகச நிகழ்ச்சிகைளையும் முதல்வர் கண்டு மகிழ்ந்தார்.

முன்னதாக திறந்த ஜீப்பில் சென்று காவல் துறை அணிவகுப்பை பார்வையிட்ட முதல்வருக்கு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காவல் துறை வாகனங்களின் சேவையையும் முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கடலோர காவல் படைக்காக 42 மஹிந்த்ரா ஜீப், 96 ஹோண்டா இருசக்கர வாகனங்களும் வழங்கப்பட்டன. தமிழ்நாட்டைச் சேர்ந்த 665 காவல் துறை அதிகாரிகள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Tamil Nadu Chief Minister C Joseph Vijay on Friday presented prestigious state and national medals to police, fire, and allied departmental personnel, and flagged off a new fleet of vehicles for the Coastal Security Group during a grand ceremonial parade here.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.