எதிர்காலத்தில் எதிர்க்கட்சியே இல்லாத சட்டப்பேரவையை அமைப்போம் என இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் இன்று (ஜூன் 1) தெரிவித்தார்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு தவெக தலைவர் விஜய் இன்று திருச்சிக்கு பயணம் மேற்கொண்டு, வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி ஜோசப் கல்லூரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது.
நிகழ்ச்சியில் அமைச்சர் ரமேஷ் பேசியதாவது:
''என்னைப் போன்ற சாமானியர்களை பதவியில் அமரவைத்தவர் முதல்வர் சி. ஜோசப் விஜய். இந்த நாளுக்காக பல மாதங்கள் காத்திருந்தேன். தளபதி விஜய்யை, முதல்வர் சி. ஜோசப் விஜய் என அழைக்க வேண்டும் எனக் காத்திருந்தேன். இன்று நிஜமாகியுள்ளது. சின்ன பசங்க என்று ஏளமனாக பேசாதீர்கள். சின்ன பசங்க யார் என்று நிரூபிப்பார்கள் என்று முன்பு பிரசாரங்களில் கூறினேன்.
இப்போதும் ஒன்றை கூறிக்கொள்கிறேன். இந்த சின்ன பசங்க, எதிர்காலத்தில் எதிர்க்கட்சியே இல்லாத சட்டப்பேரவையை அமைப்போம் என்று கூறிக்கொள்கிறேன்'' எனப் பேசினார்.
Summary
Let us establish a Legislative Assembly without an opposition: Minister Ramesh
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணைக் குழு அமைப்பு!!
உங்களுக்கு ஏன் கொந்தளிப்பு வருகிறது: திமுக எம்எல்ஏ-க்கு அமைச்சர் ரமேஷ் கேள்வி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ரமேஷ்! | TVK






