திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்திருச்சியில் முதல்வர் விஜய் சாலைவலம்!பொறியியல் கலந்தாய்வு: விண்ணப்பிக்க ஜூன் 5 வரை கால அவகாசம் நீட்டிப்பு!மோகனா உள்பட உச்ச நீதிமன்றத்துக்கு 5 நீதிபதிகள் நியமனம்!ஜேஇஇ அட்வான்ஸ்டு 2026 தேர்வு முடிவுகள் வெளியீடு! - ஐஐடி தில்லி மண்டலம் முதலிடம்!!பொறியியல் கலந்தாய்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!வணிக சமையல் எரிவாயு விலை ரூ.46 உயர்வு!மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்புதிருச்சியில் முதல்வா் விஜய்யின் நிகழ்ச்சியில் கட்டுப்பாடுகள்!16 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!
/

கேரளத்தில் அடுத்த 2 நாள்களில் தென்மேற்குப் பருவமழை!

தென்மேற்குப் பருவமழை பற்றி..

News image

தென்மேற்குப் பருவமழை - DPS

Updated On :1 ஜூன் 2026, 4:26 pm IST

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை அடுத்த 2 அல்லது 3 நாள்களில் துவங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

• சுமார் 1.5 கிமீ உயரம் வரை தெற்கு கேரளம் மற்றும் அதனை ஓட்டிய தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

• சுமார் 3.1 கிமீ முதல் 7.6 கிமீ உயரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஓட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

• சுமார் 1.5 கிமீ உயரம் வரை கிழக்கு விதர்பா முதல் தெற்கு கேரளம் பகுதிகள் வரை தெலுங்கானா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் புதுவை வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

இதன் காரணமாக, கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை அடுத்த இரண்டு நாள்களிலும், தமிழ்நாட்டில் அதற்கடுத்து துவங்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சிராப்பள்ளி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

கடந்த சில நாள்களாக கடும் வெய்யில் சுட்டெரித்துவந்த நிலையில், தென்மேற்குப் பருவமழை துவங்கிய பின்னர் வெய்யிலின் தாக்கம் குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Summary

The Meteorological Department has stated that the Southwest monsoon is likely to commence in Kerala within the next two or three days.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.