/

தென்மேற்குப் பருவமழை தொடங்கியது!

தென்மேற்குப் பருவமழை தொடங்கியது பற்றி..

News image

தென்மேற்குப் பருவமழை - DPS

Updated On :59 நிமிடங்கள் முன்பு

தென்மேற்குப் பருவமழை இன்று தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெப்பம் கொளுத்திவந்த நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இந்தாண்டுக்கான தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கியுள்ளது.

அதன்படி, தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது.

இந்தாண்டு, தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் வழக்கத்தைவிட முன்னதாகவே தென்மேற்குப் பருவமழை தொடங்கவுள்ளது.

இன்று (மே 16) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் லேசான மழை பெய்யக்கூடும்.

விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தேனி மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The India Meteorological Department has stated that the Southwest Monsoon has commenced today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.