ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

வார இறுதியில் தொடங்கும் தென்மேற்குப் பருவமழை!

தமிழ்நாட்டில் இந்த வார இறுதியில் தென்மேற்குப் பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :12 மே 2026, 4:41 pm IST

தமிழ்நாட்டில் இந்த வார இறுதியில் தென்மேற்குப் பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும். இந்தாண்டு மே இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்திலேயே தொடங்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளில் இந்த வார இறுதியில் துவங்கக்கூடும்.

நேற்று (11-05-26) வடக்கு இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு திசையில் நகர்ந்து, இன்று (12-5-26) காலை 08.30 மணியளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது, அடுத்த 48 மணி நேரத்தில் இது மேலும் வலுப்பெறக்கூடும்.

சுமார் 0.9 கிமீ உயரத்தில், காற்றழுத்த தாழ்வு பகுதியின் மையப்பகுதிகளிலிருந்து மரத்வாடா வரை வட தமிழகம், ராயலசீமா மற்றும் வடக்கு உள் கர்நாடகா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

இதன் காரணமாக, இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

Summary

The Meteorological Department has stated that the Southwest monsoon is set to begin in Tamil Nadu this weekend.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.