டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

எது நடந்தாலும் திமுகதான் காரணம் எனக் கூறுவதா? உதயநிதி பதிவு!

எது நடந்தாலும் திமுகதான் காரணம் என தவெகவினர் கூறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேச்சு...

Leader of Opposition Udhayanidhi

உதயநிதி | விஜய் - கோப்புப் படம்

Published On :

தமிழகத்தில் எது நடந்தாலும் திமுகதான் காரணம் எனக் கூறுவதை தவெகவினர் வழக்கமாகக் கொண்டுள்ளதாக, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் இன்று (ஜூன் 4) நடைபெற்ற திமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய உதயநிதி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் திமுக தனது வெற்றி வாய்ப்புகள் பலவற்றை இழந்துள்ளது எனவும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் கிடைத்த வெற்றிக்குக் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களே காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இந்த நிகழ்வு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,

“எது நடந்தாலும், திமுகதான் காரணம் என்ற டெம்பிளேட்-ஐ, டூல்கிட்-ஆகத் தூக்கிக் கொண்டு அலையும் சோஃபா மாடல் அரசின் அவலங்களை மக்கள் இடையில் அம்பலப்படுத்துவோம்” எனக் கூறியுள்ளார்.

Summary

Udhayanidhi has criticized the Tvk has made it a routine practice to claim that the DMK is responsible for whatever happens in Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.