பிரவீண் சக்ரவர்த்தி குறிப்பிட்ட தவெக கூட்டணியில் இல்லை! இந்திய கம்யூ. லஞ்சம், போதை இல்லா தமிழகம்! அமைச்சரவைக் கூட்டத்தில் 436 திட்டங்கள் முன்வைப்பு!ஜூன் 18ல் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது!ரஜினி அழைத்தும் மறுப்பு தெரிவித்து பாஜகவில் இணைந்தேன்! அண்ணாமலைஅரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு! மத்திய அரசு தாம்பரத்தில் சிக்னல் கோளாறு! நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள்! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! முதல்வா் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது! பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத ஆண் சடலம்! உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா! ரஷிய அதிபர்தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை: நயினார் நாகேந்திரன்

அன்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் பேசியது குறித்து...

News image

அண்ணாமலை - நயினார் நாகேந்திரன். - கோப்புப்படம்

Updated On :5 ஜூன் 2026, 2:40 pm IST

அன்ணாமலை கட்சியிலிருந்து விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெள்ளிக்கிழமை பேசியுள்ளார்.

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலை, அந்தக் கட்சியிலிருந்து விலகி, இது நம்ம இயக்கம் (We the leader) என்ற அமைப்பை இன்று உருவாக்கியிருப்பதாக அறிவித்தார்.

வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்றும் அந்தக் கட்சியில் நிரந்தர பதவி ஒழிக்கப்படும் என்றும் கருத்துகளைத் தெரிவித்தார். மேலும், ஆதரவாளர்கள் சிறிது காலம் அமைதியாக இருக்கவும் வேண்டுகோள் விடுத்தார்.

இது குறித்து தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:

பாரதிய ஜனதா கட்சி இன்று, நேற்று ஆரம்பித்த கட்சி அல்ல. சித்தாந்தத்தின் அடிப்படையிலான கட்சி. அண்ணாமலை கட்சியிலிருந்து விலகியதில் தமிழக பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர் கட்சியிலிருந்து விலகியதில் கருத்து கூற முடியாது. நரேந்திர மோடி எங்கு சென்றாலும் தமிழின் பெருமையைப் பற்றி பேசுகிறார். இப்போதும் கூட, நமது செப்பேடுகளை மீட்டு வந்திருக்கிறார்.

தமிழ் மக்களின் மீது பாஜக என்றும் அக்கறையுடன் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. கட்சி யார் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். ஜனநாயகத்தில் அனைவருக்கும் அதற்கான உரிமை உண்டு. மாநில அளவிலான உரிமைகளுக்கு பாஜக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது தவறான குற்றச்சாட்டு என்று தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்.

Summary

Nainar Nagendran, the BJP's Tamil Nadu state president, stated on Friday that the party would face no impact from Annamalai's departure.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.