தேர்தல் தோல்விக்கு காங்கிரஸ் மீது திமுக குற்றம் சாட்டுவது ஏன் என மாணிக்கம் தாகூர் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தல் தோல்விக்கு காங்கிரஸ் கட்சியின் மீது திமுகவினர் குற்றம் சாட்டுவதாகக் கூறிய காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "தனது கட்சியின் தேர்தல் தோல்விக்கான காரணங்களை சுயபரிசோதனை செய்யாமல், காங்கிரஸை தாக்குமாறு கட்சியின் செய்தித் தொடர்பாளர்களுக்கு முன்னாள் முதல்வர் அறிவுறுத்துவது ஆச்சரியமாக உள்ளது.
தனது மகன் உதயநிதி மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோரின் அரசியல் தவறுகளை மறைக்க, காங்கிரஸ் ஒரு வசதியான பலிகடாவாக மாற்ற முயற்சி.
ஊழல், வசூல் மற்றும் ஆணவத்தின் அடையாளமாக மாறிய ஆட்சியை தமிழ்நாட்டு மக்கள் நிராகரித்தனர். அதன் விளைவு அனைவருக்கும் தெரியும். 59 இடங்களுக்கு சுருங்கியதுடன், முதல்வர் தாமும் தோல்வியடைந்தார்; 15 அமைச்சர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டனர்.
ஆனால் குற்றச்சாட்டு காங்கிரஸ் மீது. ஏன்?
ஏனெனில், தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் உறுதுணையாக நின்றது. மேலும், பாஜக ஆதரவுடன் பழனிசாமி தலைமையிலான ஆட்சியை அமைக்கும் திட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
மக்களின் தீர்ப்பிலிருந்து கவனத்தை திசைதிருப்பும் அரசியல் சில காலம் உதவலாம். ஆனால் உண்மையை மறைக்க முடியாது.
அண்ணன் அவர்களே, சுயபரிசோதனை செய்வதற்குப் பதிலாக மகனை காக்க இந்த திசைதிருப்பும் அரசியல் ஏன்?" என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
Manickam Tagore MP questions DMK on why they are blaming the Congress for the election defeat
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் மூச்சுவிடவும் டோக்கன் வாங்க வேண்டுமா? பாஜக அரசுக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி
கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
அமைச்சர் பெ. விஸ்வநாதன் மீது புகார்: நயினார் நாகேந்திரனுக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக மாணிக்கம் தாகூர் நாளை பதவியேற்பு!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


