தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக மாணிக்கம் தாகூர் நாளை(ஜூன் 29) பதவியேற்கவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக உள்ள மாணிக்கம் தாகூர், மக்களவை காங்கிரஸ் கொறடாவாகவும் உள்ளார். ஆந்திரம், அந்தமான்-நிக்கோபாா் காங்கிரஸ் பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் திமுகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட காங்கிரஸ், தவெக அரசுக்கு ஆதரவளித்தது. தவெக அமைச்சரவையிலும் இடம்பெற்றது.

இந்தச் சூழலில், தேர்தல் முடிவு வெளியான உடனேயே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவை அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு கே. செல்வப்பெருந்தகை தெரிவித்ததாகத் தகவல் வெளியானது. இருப்பினும், தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு மாதங்கள் நெருங்கியுள்ள நிலையில் செல்வப்பெருந்தகை மாற்றப்படாமல் இருந்தார்.
இதனிடையே, செல்வப்பெருந்தகைக்குப் பதிலாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூரை நியமித்து சனிக்கிழமை அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக பொறுப்பேற்கும் மாணிக்கம் தாகூரின் பதவியேற்பு விழா, நாளை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை சத்தியமுர்த்தி பவனில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.
Summary
The party leadership has announced that Manickam Tagore will assume office as the President of the Tamil Nadu Congress Committee tomorrow (June 29).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!
தேர்தல் தோல்வி! சுயபரிசோதனை செய்யாமல் காங்கிரஸ் மீது தாக்குதல் ஏன்? மாணிக்கம் தாகூர்
திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர்!






