உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பவானி - துபைக்கு ரூ. 10,000! அரசுப் பேருந்து டிக்கெட்டால் அதிர்ச்சி!

அரசுப் பேருந்தில் வழங்கப்பட்ட பயணச்சீட்டால் பயணி அதிர்ச்சி...

ticket

பயணச்சீட்டு - x

Published On :

பவானியில் இருந்து ஓசூருக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்தில் துபை என அச்சிடப்பட்ட பயணச்சீட்டு வழங்கப்பட்டதால் பயணி அதிர்ச்சி அடைந்தார்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், சேலம் மண்டலத்தின் கீழ் இயக்கப்படும் கோவை - பெங்களூரு வழித்தடப் பேருந்தில் பவானி புறவழிச் சாலை நிறுத்தத்தில் தாமோதரன் என்பவர் தனது நண்பருடன் கடந்த திங்கள்கிழமை ஏறியுள்ளார்.

ஓசூர் பேருந்து நிலையத்தில் இறங்க பேருந்து நடத்தினரிடம் அவர் பயணச்சீட்டு கேட்டுள்ளார்.

பவானி புறவழிச் சாலையில் இருந்து ஓசூருக்கு ரூ. 150 பேருந்து கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட பயணச்சீட்டில் ரூ. 10,000 என அச்சிடப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.

Story image

மேலும், அந்த பயணச்சீட்டில் பவானி புறவழிச்சாலை முதல் துபை என்று அச்சிடப்பட்டிருந்தது. பின்னர், அவருக்கு மாற்று பயணச்சீட்டு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனக்கு வழங்கப்பட்ட பயணச்சீட்டின் புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் தாமோதரன் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த பயணச்சீட்டு வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றது.

இதனிடையே, பயணச்சீட்டு வழங்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட மென்பொருள் கோளாறு காரணமாகதான் தவறுக்கு காரணம் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Summary

Bhavani to Dubai: Rs. 10,000! Shock over government bus ticket!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.