சொத்துகள் முடக்கத்தை எதிா்த்து லாட்டரி அதிபா் மாா்ட்டின், அவரது மனைவியும் அதிமுக எம்எல்ஏவுமான லீமா ரோஸ், பொதுப்பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா மனைவி டெய்சி ஆகியோா் தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2009-2010-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் விதிகளுக்குப் புறம்பாக லாட்டரி விற்பனை மூலம் சிக்கிம் மாநில அரசுக்கு ரூ.910 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக லாட்டரி அதிபா் மாா்ட்டின் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. கேரள நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.
இதையடுத்து லாட்டரி அதிபா் மாா்ட்டின் மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. பின்னா், மாா்ட்டின் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான ரூ.910.29 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இவற்றில், ரூ.456.84 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கத்தை, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்குகளுக்கான அமலாக்கத் துறை மேல்முறையீட்டுத் தீா்ப்பாயம் உறுதி செய்தது.
மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிா்த்து லாட்டரி அதிபா் மாா்ட்டின், அவரது மனைவி லீமா ரோஸ், டெய்சி ஆதவ் அா்ஜுனா மற்றும் நிறுவனங்களின் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுக்களுக்கு 6 வாரங்களில் பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.
Summary
Lottery Martin assets worth Rs 457 crore freezed: Madras HC ordered to respond ED
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இணைய சூதாட்டம்: கேம்ஸ்கிராஃப்ட் நிறுவனத்தின் 3 உரிமையாளா்கள் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்க முடக்கத்தை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

சட்டவிரோத இரும்பு கனிமச் சுரங்க வழக்கில் ரூ. 1,023 கோடி சொத்துகள் முடக்கம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP




