கோவாவில் சட்டவிரோத இரும்பு கனிமச் சுரங்க வழக்கில் ரூ.1,023 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை ஞாயிற்றுக்கிழமை முடக்கியது. இந்த வழக்கு தொடா்பாக சிங்கப்பூரில் உள்ள சொத்துகளும் முடக்கப்பட்டன.
இதுதொடா்பாக அமலாக்கத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கோவாவில் சட்டவிரோத இரும்புச் சுரங்கம் நடத்திய குற்றச்சாட்டு தொடா்பான வழக்கில் சல்காவ்கா் குழுமம் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு (ஏவிஎஸ்) பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் சொத்துகளை முடக்குவதற்கான தற்காலிக ஆணை கடந்த ஜூன் 19-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து இந்தியாவில் அந்தக் குழுமத்துக்குச் சொந்தமான ரூ.459.10 கோடி மதிப்பிலான சொத்துகள், சிங்கப்பூரில் ரூ.471.31 கோடி மதிப்பிலான அடையா சொத்துகள் மற்றும் இந்திய நிறுவனங்களில் ரூ.93.42 கோடி மதிப்பிலான பங்குகள் என மொத்தம் ரூ.1,023 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன.
கோவா காவல் துறை சிஐடி பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் பண முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. முன்னதாக, கோவாவில் 2007-ஆம் ஆண்டு நவம்பா், 22-ஆம் தேதிக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட அனைத்துச் சுரங்கப் பணிகளும் சட்டவிரோதமானது என 2014, 2018 ஆகிய ஆண்டுகளில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்புகளில் தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில், 2007-2012 காலகட்டத்தில் சட்டவிரோதமாக 10 சுரங்கங்களை நடத்தி இரும்பு தாதுக்களை ஏற்றுமதி, விற்பனை செய்து ரூ.2,492.95 கோடி வருவாயை ஏவிஎஸ் குழுமம் ஈட்டியுள்ளது. பிரிட்டிஷ் விா்ஜின் தீவுகளில் உள்ள நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் இந்த இருப்புத் தாதுக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கிருந்து சீனாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.2,744.89 கோடி லாபம் ஈட்டப்பட்டுள்ளது.
இந்த லாபத் தொகையை சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் மூலம் அசையும் மற்றும் அசையா சொத்துகளாக மாற்றி அவை பங்கு முதலீடுகளாக மீண்டும் இந்தியாவுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 9 - நேரலை!

சொத்துகள் முடக்கத்தை எதிா்த்து மாா்ட்டின், குடும்பத்தினா் வழக்கு: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு

ரூ. 142 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல்: மூன்று மாநிலங்களில் அமலாக்கத் துறை சோதனை
வீடு விற்பனையில் 19,000 பேரிடம் ரூ. 2,004 கோடி மோசடி: 4 போ் கைது
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




