‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பயங்கரவாதிகளுக்கு உரிய பதிலடி: பிரதமர் மோடி உறுதிஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ரஷியா ஆதரவுசெஸ் ஒலிம்பியாட்: இந்தியாவுக்கு வெள்ளி, வெண்கலம்நீட் வினாத்தாள் கசிவு சம்பவங்கள்: என்டிஏ அலுவலகத்துக்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்புதமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

திருப்போரூரில் 23 -வது அமிர்த வித்யாலயம் பள்ளி தொடக்கம்!

திருப்போரூர் காலவாக்கத்தில் அமிர்தானந்தமயி மடத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 23-வது புதிய பள்ளி தொடக்க விழா பற்றி...

23rd Amrita Vidyalayam School started in Kalavakkam

இராமகிருஷ்ணானந்தபுரி சுவாமிகள், வினயாம்ரிதானந்தபுரி சுவாமிகளுடன் அமைச்சர் மதன் ராஜா... - DIN

Published On :

திருப்போரூரில் அமிர்தானந்தமயி மடத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 23-வது புதிய பள்ளி, ஜூன் 11 -ல் தொடங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் காலவாக்கத்தில், அமிர்தானந்தமயி மடத்தின் நிர்வாகத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளியின் தொடக்க விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு இராமகிருஷ்ணானந்தபுரி சுவாமிகள் தலைமை தாங்கினார். வினயாம்ரிதானந்தபுரி சுவாமிகள் முன்னிலை வகித்தார்.

விழாவில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் பி. மதன் ராஜா கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அமைச்சர் மதன் ராஜாவை மாத்ருகிருபாம்ரித சைதன்யா, பொன்னாடை அணிவித்து வரவேற்றார். விழாவில் அமைச்சருடன் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் விஜயராஜ், காலவாக்கம் பஞ்சாயத்து தலைவர் தேவராஜ், காலவாக்கம் கவுன்சிலர் நித்தியானந்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

விழாவில் அமைச்சர் சிறப்புரையாற்றுகையில், "மாணவர்களின் எதிர்காலம் கல்வியால் மட்டுமே உருவாக்கப்படும், அத்தகைய சிறப்பான கல்வியை அளிக்க வேண்டியது பெற்றோர் மற்றும் பள்ளியின் கடமையாகும். இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே அமிர்த வித்யாலயம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளி மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டார்.

பள்ளியின் தாளாளர் ஸ்வாமினி பக்திபிரியாமிர்த ப்ராணா, அமிர்த வித்யாலயம் மைய கல்வி அலுவலர் முரளீதரன், பள்ளி முதல்வர் சித்திரா தேவி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.

Summary

23rd Amrita Vidyalayam School started in Kalavakkam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.