வேலூர் மாவட்டத்தில் திடீரென பெய்த பலத்த காற்றுடன் கூடிய கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனா். இந்நிலையில், வழக்கம்போல சனிக்கிழமை காலையும் வெயில் கொளுத்திவந்த நிலையில், மாலை பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசியது.
இதையடுத்து, மாநகரில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக காட்பாடி சித்தூர பேருந்து நிலையம், கோணவட்டம் சர்வீஸ் சாலை உள்ளிட்ட மாநகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். மேலும் பலத்த காற்று, கனமழை காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. கனமழை காரணமாக சற்றே வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Summary
Heavy rain with strong winds suddenly lashed Vellore district, causing rainwater to stagnate in low-lying areas.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










