தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலை கனமழையுடன் பலத்த காற்று வீசியதில் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான இணைப்பு படிக்கட்டுகள் மோதியதில் ஏர் இந்தியா விமானங்கள் சேதமடைந்தன.
தில்லியில் பல்வேறு இடங்களில் நேற்று பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்த நிலையில், தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், பயணிகள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் பயன்படுத்தப்படும் இண்டிகோ நிறுவனத்தின் படிக்கட்டுகள், பலத்த காற்றால் நகர்ந்து, ஏர் இந்தியாவின் விமானத்தின் மீது மோதியது.
இதனால், விமான நிலையத்தில் டெர்மினல் 2-ல் நிறுத்துமிடம் 206-ல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏர் இந்தியாவின் மூன்று விமானங்கள் சேதமடைந்துள்ளது. இதையடுத்து, மூன்று விமானங்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிகழ்வின் போது, விமானத்தில் பயணிகள், ஊழியர்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மழை, புயல் குறித்து வானிலை முன்னறிவிப்பு எதுவும் விடுக்கப்படவில்லை என்று விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
How alert Agile (6E ground handling co) staff ran to stop an @IndiGo6E stepladder just in time - 6.5 metres away from an @airindia âï¸ parked at @DelhiAirport T2 bay 206 on Sunday evening
— Saurabh Sinha (@27saurabhsinha) June 7, 2026
There was no prior storm/bad weather warning, say IGIA and airlines https://t.co/inrJqMawHB pic.twitter.com/5fGnxqWcLt
இந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடவில்லை.
எனினும், சேதமடைந்த விமானங்களில் இரண்டு விரைவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என்றும், மூன்றாவது விமானத்தைச் சரிசெய்ய சற்று கூடுதல் காலமாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
Rain accompanied by strong winds in Delhi! Three aircraft damaged!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மும்பையில் ஒரே ஓடுபாதையில் இரு விமானங்கள்! நூலிழையில் கோர விபத்து தவிர்ப்பு!

அசாமில் இருந்து துபை, அபுதாபிக்கு நேரடி விமானம்! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!
சென்னையில் பலத்த காற்றுடன் மழை! வானில் வட்டமடித்த விமானங்கள்

வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



