புதிய உச்சத்தில் முட்டை விலை!விசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்!

அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம் மீட்கப்பட்டது பற்றி...

News image

கொலை - பிரதிப் படம்

Updated On :17 ஜூன் 2026, 5:21 pm IST

அன்னூர் பகுதியில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுபாளையம் - அன்னூர் சாலையில் கோபி ராசிபுரம் பகுதியில் மூடப்பட்ட தொழிற்சாலையின் பாழடைந்த கிணற்றில் துர்நாற்றம் வீசுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த கிணற்றில் இருந்த சாக்கு மூட்டையை தீயணைப்புத் துறையினர் மீட்ட நிலையில், அதில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் இருந்துள்ளது.

இதுதொடர்பாக சிறுமுகை காவல்துறையினர் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து ஆய்வு நடத்தி வருகிறார்கள். சடலம் அழுகிய நிலையில் இருப்பதால் அடையாளம் காண முடியாவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், காவல்துறை கண்காணிப்பாளர் சம்பவ இடத்தை ஆய்வு செய்த நிலையில், அடையாளம் தெரியாத பெண் யார்? கொலை செய்து கிணற்றில் வீசியது யார்? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Summary

Body of a woman found in a sack near Annur!