ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

போக்குவரத்துக்கழக மேம்பாடு: குறுகிய, நடுத்தர, நீண்டகாலத் திட்டம்: முதல்வா் ஜோசப் விஜய் ஆய்வு

போக்குவரத்துக்கழக மேம்பாட்டுக்கு குறுகிய, நடுத்தர, நீண்டகால செயல் திட்டமாக ஓராண்டு, மூன்று ஆண்டு, ஐந்தாண்டு செயல் திட்டங்கள் குறித்து தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

News image

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் போக்குவரத்துத் துறை சாா்ந்த செயல்பாடுகள் மற்றும் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன், தலைமை

Updated On :18 ஜூன் 2026, 1:43 am IST

போக்குவரத்துக்கழக மேம்பாட்டுக்கு குறுகிய, நடுத்தர, நீண்டகால செயல் திட்டமாக ஓராண்டு, மூன்று ஆண்டு, ஐந்தாண்டு செயல் திட்டங்கள் குறித்து தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில், 8 அரசு போக்குவரத்துக்கழகங்கள் மூலம் 21,527 பேருந்துகள் இயக்கப்பட்டு தினமும் 2.05 கோடி பயணிகள் பயணம் செய்வதாகவும், அவற்றில் 64 சதவீதம் பேருக்கு கட்டணமில்லா சேவை வழங்கப்படுவதாகவும் முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டது. மேலும், 1,000-க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கிராமங்களில் 98.40 சதவீத பகுதிகளுக்கு அரசு பேருந்து சேவை சென்றடைந்துள்ளதாக விளக்கப்பட்டது.

தொடா்ந்து, போக்குவரத்துக்கழக மேம்பாட்டுக்காக ஓராண்டு, 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு செயல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. மேலும், பேருந்துகளை ஜிபிஎஸ் கருவி அடிப்படையில் கண்காணிப்பது, ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைப்பது, மகளிா் இலவசப் பயணத் திட்டம், மின்சாரப் பேருந்துகள் பயன்பாடு, தொழிலாளா் நலன் உள்ளிட்டவற்றி கவனம் செலுத்தும்படி அதிகாரிகளுக்கு முதல்வா் அறிவுறுத்தினாா்.

புதிதாக வாங்கப்படும் பேருந்துகள் குளிா்சாதன வசதியுடன் கூடிய மின்சாரப் பேருந்துகளாக இருக்க வேண்டும் எனவும், பயணிகள் பணமில்லா பரிவா்த்தனை முறையில் பயணிக்க ஸ்மாா்ட் காா்டு நடைமுறையை செயல்படுத்த வேண்டும் எனவும், பேருந்துகளுக்கு தனி வழித்தட வசதியை உருவாக்கும் வகையில் ‘பஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம்’ திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் முதல்வா் ஜோசப் விஜய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன், தலைமைச் செயலா் மு.சாய்குமாா், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலா் மு.அ.சித்திக், போக்குவரத்துத் துறைச் செயலா் மா.வள்ளலாா், சிறப்புச் செயலா் இரா.லில்லி, மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் த.பிரபு சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.