நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

பாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுக

பாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை என்று திமுக தெரிவித்தது பற்றி...

News image

டிகேஎஸ் இளங்கோவன் - கோப்புப் படம்

Updated On :17 ஜூன் 2026, 5:07 pm IST

பாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை என்று திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் புதன்கிழமை (ஜூன் 17) தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக சி. ஜோசப் விஜய் பதவியேற்ற போது, மாநிலத்தின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி, தமிழ்நாட்டின் நிதிநிலைமை தொடர்பாக நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று (ஜூன் 16) வெள்ளை அறிக்கை வெளியிட்டார்.

இது குறித்து டி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது:

உண்மையில் என்ன நடக்கிறது என்பது பற்றி அவர்கள் (தவெக அரசு) கவலைப்படுவதில்லை என்பது நமக்குத் தெரியும். பாஜக அரசுக்கு அஞ்சுவதால், மத்திய அரசு மாநிலங்களுக்குப் போதுமான நிதி வழங்கவில்லை என்பது பற்றி அவர்கள் பேசுவதில்லை. பாஜக அரசை விமர்சிக்க அவர்கள் தயாராக இல்லை. அவர்களின் வெள்ளை அறிக்கை, சிறப்பாகச் செயல்பட்ட திமுக அரசை விமர்சிப்பதற்காக மட்டுமே வெளியிடப்பட்டது.

தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இரண்டாவது பெரிய மாநிலமாகும் என்று பொருளாதாரக் குறியீடுகள் காட்டுகின்றன. பொருளாதாரம் மேம்பட்டு, சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இது தேவையுள்ள மற்றும் ஏழை மக்களுக்கு உதவுகிறது. இது மிகவும் அவசியமானதாகும். ஏனெனில், தேவையுள்ள குடிமக்களுக்கு உதவுவதே ஒரு ஜனநாயக அரசாங்கத்தின் கடமையாகும் என்று டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

Summary

DMK spokesperson T.K.S. Elangovan stated on Wednesday (June 17) that the TVK is not prepared to criticize the BJP government.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.