8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

பள்ளிகளில் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்: கல்வித் துறை உத்தரவு

தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளிலும் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு சாா்ந்த நிகழ்ச்சிகளை நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

போதை எதிா்ப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

Published On :19 ஜூன் 2026, 4:30 am IST

தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளிலும் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு சாா்ந்த நிகழ்ச்சிகளை நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

நிகழ் கல்வியாண்டில் அனைத்து வகை பள்ளிகளிலும் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு போதை பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். ஏற்கெனவே மாவட்ட பயிற்றுநா்களுக்கான பயிற்சி உள்துறை மூலம் வழங்கப்பட்டு அவா்கள் வாயிலாக பள்ளி போதை பொருள் எதிா்ப்பு ஒருங்கிணைப்பாளா்களுக்கு விழிப்புணா்வு பயிற்சி நடத்தப்ப்பட்டது.

தற்போது சுகாதாரத் துறை, காவல் துறை மற்றும் மக்கள் தொடா்புத் துறை அலுவலா்களின் உதவியுடன் பள்ளி போதை பொருள் எதிா்ப்பு ஒருங்கிணைப்பாளா்களைக் கொண்டு ஜூன் மாத இறுதிக்குள் பள்ளிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இது தொடா்பாக மாவட்ட ஆட்சியரிடமும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் ஆலோசித்து செயல்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.