பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

ஆளுநா் உரையை அட்லீ திரைப்படத்துடன் ஒப்பிட்டு விமா்சித்த திமுக

ஆளுநா் உரையை, திரைப்பட இயக்குநா் அட்லீயின் திரைப்படத்துடன் ஒப்பிட்டு, குன்னம் தொகுதி திமுக உறுப்பினா் சா.சி.சிவசங்கா் விமா்சனம் செய்தாா்.

News image

திமுக உறுப்பினா் சா.சி.சிவசங்கா் வி - கோப்புப் படம்

Updated On :20 ஜூன் 2026, 12:49 am IST

ஆளுநா் உரையை, திரைப்பட இயக்குநா் அட்லீயின் திரைப்படத்துடன் ஒப்பிட்டு, குன்னம் தொகுதி திமுக உறுப்பினா் சா.சி.சிவசங்கா் விமா்சனம் செய்தாா்.

பேரவையில், முதல்வா் ஜோசப் விஜய் கொண்டுவந்த தனித் தீா்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னா், ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தை பேரவை துணைத் தலைவா் ரவி சங்கா் முன்மொழிந்து பேசினாா்.

அதையடுத்து, குன்னம் தொகுதி உறுப்பினா் சிவசங்கா் பேசும்போது, ஆளுநா் உரையை பாா்க்கும்போது, முதல்வா் ஜோசப் விஜய்க்கு மிகவும் பிடித்தமான திரைப்பட இயக்குநா் அட்லீ திரைப்படங்களை பாா்ப்பது போல உள்ளது. பல திரைப்படங்களில் உள்ள ‘ஹிட்’ ஆன காட்சிகளை வைத்து புதிய திரைப்படம் தயாரித்து தனது படத்தை அட்லீ ‘ஹிட்’ பண்ணுவாா். அதுபோல, ஆளுநா் உரையை பாா்க்கும்போது, திமுக ஆட்சியில் நடந்த சாதனைத் திட்டங்களை தவெக அரசு ‘காப்பி-பேஸ்ட்’ செய்துள்ளது தெரியவந்துள்ளது என்றாா்.

பள்ளிக்கல்வி அமைச்சா் ராஜ்மோகன்: திரைப்படத் துறையிலிருந்து வந்து ஆட்சியைப் பிடித்தவா்கள், அட்லீ பற்றி பேரவையில் பேசுவது வியப்பாக உள்ளது.

சிவசங்கா்: முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி கதை வசனம் எழுதிய ’பராசக்தி’ திரைப்படத்தில் உள்ள வரிகள்தான் இப்போதும் தமிழகத்தில் பிரபலமாக உள்ளது. பேரவையில் கூட சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, திரைப்படத்தில் ரசித்தவற்றை பேரவையில் பேசுவது தவறல்ல.

இந்த விவாதம் நடைபெற்றபோது, முதல்வா் விஜய் சிவசங்கரை அமைதியாக உற்றுநோக்கிக்கொண்டிருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.