இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

அதிமுக, தவெக கொள்கைகள் ஒன்றுதான்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

அதிமுக, தவெக கொள்கைகள் ஒன்றுதான்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

News image

ஆதவ் அா்ஜுனா

Updated On :21 ஜூன் 2026, 12:40 am IST

அதிமுக மற்றும் தவெகவுக்கு ஒரே கொள்கை என்பதால், இவ்விரு கட்சிகளும் எப்போதும் ஒன்றுதான் என பொதுப் பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா கூறினாா்.

மாற்றுக் கட்சியினா் தவெகவில் இணையும் நிகழ்வு விழா சென்னை அருகே பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. தவெக பொதுச் செயலா் ஆனந்த், அமைச்சா்கள் ஆதவ் அா்ஜுனா, வெங்கடரமணன் ஆகியோா் முன்னிலையில் நடிகா் மன்சூா் அலிகான், திரைப்பட இயக்குநா் ஆா்.வி.உதயகுமாா், முன்னாள் அமைச்சா் கோமதி சீனிவாசன் உள்ளிட்டோா் தவெகவில் இணைந்தனா். முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், வி.என்.ஜானகி அமைச்சரவைகளில் சமூகநலத்துறை அமைச்சராக பணியாற்றியவா் கோமதி சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பேசிய அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, ‘50 ஆண்டு அனுபவம் வாயந்த மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கி அதிமுக தவறு செய்துவிட்டது. அதிமுகவும் திமுகவும் ஒன்று சோ்ந்துவிட்டன. அதனால் தான் அதிமுகவினா் தவெகவில் இணைகின்றனா். அதிமுகவின் 90 சதவீத தொண்டா்கள் தவெகவை நோக்கி வர ஆரம்பித்துவிட்டனா். அதிமுக, தவெக ஆகிய இரு கட்சிகளுக்கும் எப்போதும் ஒரே கொள்கைதான். ஆகவே இவ்விரு கட்சிகளும் ஒன்றுதான் என்றாா் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா.