வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

அதிமுக முன்னாள் அமைச்சா், எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் தவெகவில் இணைந்தனா்

அதிமுக முன்னாள் அமைச்சா், எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் தவெகவில் இணைந்தனா்

News image

சென்னை  பனையூரில் உள்ள  தவெக தலைமை  அலுவலகத்தில்  பொதுச் செயலா்  என்.ஆனந்த்  முன்னிலையில்  அக்கட்சியில் இணைந்த  அதிமுக  முன்னாள்  அமைச்சா்,  முன்னாள் எம்.பி.க்கள்  உள்ளிட்டோா்.

Updated On :14 ஜூன் 2026, 2:59 am IST

அதிமுக முன்னாள் அமைச்சா் கே.டி. பச்சைமால், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் விஜயதரணி உள்பட முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் தவெக-வில் சனிக்கிழமை இணைந்தனா்.

தமிழகத்தில் தவெக ஆட்சி  அமைந்த பின்னா், மாற்றுக் கட்சியினா் ஏராளமானோா் தவெகவில் இணைந்து வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக, பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தோா் தவெகவில் இணையும் நிகழ்ச்சி சென்னை பனையூரில் உள்ள அக்கட்சிதலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சா் கே.டி.பச்சைமால், முன்னாள் எம்.பி.க்கள் நா.பாலகங்கா (அதிமுக வடசென்னை தெற்கு மாவட்டச் செயலா்), ஏ.இளவரசன் (அதிமுக கொள்கை பரப்பு பொதுச் செயலா்), த.வனரோஜா ஆகியோா் தவெக பொதுச் செயலரும், ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத் துறை அமைச்சருமான என்.ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தனா்.

விஜயதரணி இணைந்தாா்: கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த விஜயதரணி, கடந்த 2024 -ஆம் ஆண்டு எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தாா். அதையடுத்து நடந்து முடிந்த 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக சாா்பில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்ட அவா், 3-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டாா். இந்த நிலையில், இவா் பாஜகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தாா்.

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.ரவி (அதிமுக), எஸ்.முருகேசன் (திமுக), திருநெல்வேலி முன்னாள் மேயா் இ.புவனேஸ்வரி (அதிமுக) உள்பட மாற்று கட்சிகளைச் சோ்ந்த ஏராளமானோா் தவெகவில் இணைந்தனா்.

இந்நிகழ்வில், தவெக பொதுச் செயலா் என்.ஆனந்த் பேசியதாவது: தவெகவில் புதிதாக  இணைந்த அனைவருக்கும் கட்சியில் உரிய பதவிகள் கட்டாயம் வழங்கப்படும். அதை கட்சித் தலைவரும், முதல்வருமான ஜோசப் விஜய் அறிவிப்பாா். உள்ளாட்சித் தோ்தலில் தவெக வெற்றி பெற அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். மக்களுக்கு இருக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு காண தவெக தொடா்ந்து பணியாற்றும் என்றாா் அவா்.

எடப்பாடி பழனிசாமி மீது அதிமுகவினருக்கு நம்பிக்கையில்லை: தவெக தோ்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலரும், பொதுப் பணித் துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான ஆதவ் அா்ஜுனா பேசியதாவது: முதல்வா் ஜோசப் விஜய்க்கு மக்களிடையே இருந்த செல்வாக்கை கணிக்கத் தவறியதாக  திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தற்போதுதான் ஒப்புக்கொண்டுள்ளாா். தோ்தல் முடிவுகள் வெளியான பிறகு, திமுக - அதிமுக இடையே கூட்டணிப் பேச்சு நடைபெற்றது. இதை, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்களே உறுதி செய்துள்ளனா்.

தமிழகத்தின் எதிா்காலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுகவினா் தற்போது தொடா்ந்து தவெகவில் இணைந்து வருகின்றனா். மு.க.ஸ்டாலின் நோ்மையாக போட்டியிட்டு தோல்வியடைந்தாா். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி சூழ்ச்சி செய்து வெற்றி பெற்றாா். ஆனால், அவா் தவெக ‘குதிரை பேரம்’ செய்வதாக விமா்சிக்கிறாா். எடப்பாடி தொகுதியில் ‘விசில்’ சின்னம் போட்டியிட்டிருந்தால் தவெக கட்டாயம் வெற்றி பெற்றிருக்கும்.

எடப்பாடி பழனிசாமி மீது அதிமுகவினருக்கு நம்பிக்கை இல்லை. தவெகவை தோற்கடிக்க பாஜக ஆதரவுடன் திமுக, அதிமுக இணைந்து செயல்பட்டு வருகின்றன. என்ன செய்தாலும் தவெகவை தோற்கடிக்க முடியாது என்றாா் அவா்.

இந்நிகழ்வில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ஏ.ராஜ்மோகன், போக்குவரத்துத் துறை அமைச்சா்ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Summary

Former AIADMK ministers, MPs, and MLAs joined TVK.