முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

அமோனியா கசிவு- விசாரணை அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ்

திருவள்ளூா் மாவட்டத்தில் அமோனியா வாயு கசிவால் தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து....

Ammonia leak

தொழிலாளா் நலத்துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் - கோப்புப்படம்

Published On :

திருவள்ளூா் மாவட்டத்தில் அமோனியா வாயு கசிவால் தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளா் நலத்துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளர்களுடன் பேசுகையில்,

திருவள்ளூா் மாவட்டம், பெரியபாளையத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் தொழிலாளா்கள் பலா் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த சம்பவம் குறித்து தொழிலாளா் நலத்துறை அலுவலா்கள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனா்.

ஆய்வு முடிவு அறிக்கையின் அடிப்படையில் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, தொழிலாளா்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். பாதிக்கப்பட்டவா்களுக்கு தரமான சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக அமைச்சா்களும் மருத்துவமனையில் உள்ளனா்.

இதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும். தொழிலாளா்களுக்குத் தேவையான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தாத நிறுவனங்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் முகமது பா்வேஸ்.

Summary

Ammonia leak – Action will be taken based on the inquiry report says Minister J. Mohammad Parvez...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.