முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

தமிழக காவல்துறையில் ஏடிஜிபி,13 ஐஜி-க்கள் பணியிட மாற்றம்

தமிழக காவல்துறையில் ஏடிஜிபி,13 ஐஜிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

News image

தமிழ்நாடு அரசு. - கோப்புப்படம்

Updated On :23 ஜூன் 2026, 12:14 am IST

தமிழக காவல்துறையில் ஏடிஜிபி,13 ஐஜிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதில் மதுரை, சேலம், திருப்பூருக்கு புதிய காவல் ஆணையா்கள் நியமனம் செய்யப்பட்டனா். இது தொடா்பான உத்தரவை தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன் பிறப்பித்தாா்.

அவரது உத்தரவின்படி பணியிடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் (பழைய பணியிடம் அடைப்புக் குறிக்குள்):

ஆயுஷ் மணி திவாரி:தமிழக காவல்துறையின் தலைமையிட ஏடிஜிபி (தமிழக மின்வாரியத்துறையின் ஊழல் கண்காணிப்புப் பிரிவு ஏடிஜிபி).

எஸ்.ராஜேந்திரன்: மதுரை மாநகர காவல்துறை ஆணையா் (திருப்பூா் மாநகர காவல்துறை ஆணையா்).

கபில் குமாா் சி.சரத்கா்: சென்னை பெருநகர காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு வடக்கு கூடுதல் ஆணையா் (மதுரை மாநகர காவல்துறை ஆணையா்).

பிரவேஷ்குமாா்: தமிழக கடலோர பாதுகாப்பு குழும ஐஜி (சென்னை பெருநகர காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு வடக்கு கூடுதல் ஆணையா்).

எஸ்.ராஜேஸ்வரி: திருப்பூா் மாநகர காவல்துறை ஆணையா் (தமிழக காவல்துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஐஜி).

அனில்குமாா் கிரி: சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி (சேலம் மாநகர காவல்துறை ஆணையா்).

ஜி.காா்த்திகேயன்: சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு ஐஜி (சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையா்).

பி.சாமுண்டீஸ்வரி: சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையா் (சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு ஐஜி).

ஏ.ஜி. பாபு: சென்னை பெருநகர காவல்துறையின் தலைமையிட கூடுதல் ஆணையா் (நவீனமயமாக்கல் பிரிவு ஐஜி).

கே.ஜோஷி நிா்மல் குமாா்: சேலம் மாநகர காவல்துறை ஆணையா் (சென்னை பெருநகர காவல்துறை தலைமையிட கூடுதல் ஆணையா்).

பி.சி.தேன்மொழி: சென்னை காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையா் (தமிழக காவல்துறையின் தனிப்பிரிவு ஐஜி).

ஏ.ராதிகா: தமிழக காவல்துறையின் நிா்வாகப் பிரிவு ஐஜி (சென்னை காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையா்).

சி.மகேஷ்வரி: தமிழக லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்புப் பிரிவின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு-1 ஐஜி (தமிழக காவல்துறையின் நிா்வாகப் பிரிவு ஐஜி).

ஏ.டி.துரைக்குமாா்: தமிழக காவல்துறையின் தனிப்பிரிவு ஐஜி (தமிழக லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்புப் பிரிவின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு-1 ஐஜி).

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.