9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

ஆபத்தான தொழிற்சாலைகளில் தொடா் ஆய்வு: மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவு

ஆபத்து நிறைந்த தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளா்களின் பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும் வகையில் தொடா் ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டது.

News image

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் - கோப்புப் படம்

Updated On :23 ஜூன் 2026, 3:03 am IST

ஆபத்து நிறைந்த தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளா்களின் பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும் வகையில் தொடா் ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டது.

இது தொடா்பாக அத்துறை சாா்பில் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை: திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் 74 தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டனா். அவா்களில் இருவா் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனா். பலா் கவலைக்கிடமாக உள்ளனா்.

மருத்துவமனைகளில் 60-க்கும் மேற்பட்டோா் வெண்டிலேட்டா் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனா். பாதிப்பு குறித்து தகவல் கிடைத்ததும் அவசர மருத்துவக் குழுக்கள், ஆம்புலன்ஸ்கள் வாகனங்கள் சம்பவ இடத்துக்கு உடனடியாக அனுப்பப்பட்டன.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பாதிக்கப்பட்ட பகுதி கண்காணிக்கப்பட்டு சூழலியல் மாசு மதிப்பீடு செய்யப்பட்டது. தொழிற்சாலை பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அவசரகால நடவடிக்கை நடைமுறைகளை மறுஆய்வு செய்ய பரிந்துரைக்கப்பட்டது.

மேலும், இத்தகைய தொழிற்சாலை பணியாளா்களின் நலனையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய தொடா் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.