நிகழாண்டில் பருவ மழையின்போது வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு அரசு அதிகாரிகள்தான் பொறுப்பேற்க வேண்டும் என வேளச்சேரி ஏரி ஆக்கிரமிப்புகள்தொடர்பான வழக்கை விசாரித்த தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வேளச்சேரி ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை அகற்றக்கோரி, வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கத்தின் துணைத் தலைவர் குமாரதாசன் தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில், தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், இதுகுறித்து கூடுதல் அறிக்கைகள் தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில், புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த அமர்வு, 2020}ஆம் ஆண்டில் இந்த வழக்கு தொடரப்பட்டது. ஆனால், வேளச்சேரி வெள்ள பாதிப்புகளைத் தடுப்பு நடவடிக்கைகளில் இதுவரை எந்தவித முன்னேற்றமும் இல்லை. ஆனால், நீர்நிலையை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு தற்போது மாறியிருக்கலாம், ஆனால் அதிகாரிகள் யாரும் மாறவில்லையே. இந்த பருவமழையின்போது வேளச்சேரியில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டால், அதற்கு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் தான் பொறுப்பேற்க வேண்டும் என கருத்து தெரிவித்தது.
வேளச்சேரி நீர்பிடிப்பு பகுதிகளை நெடுஞ்சாலை, வீட்டு வசதி மற்றும் குடிசை மாற்று வாரியம் என அரசு சார்ந்த துறைகள்தான் அதிகமாக ஆக்கிரமித்துள்ளன. 225 ஏக்கர் பரப்பில் இருந்த வேளச்சேரி ஏரி தற்போது 50 ஏக்கராக குறுகிவிட்டது.
அப்படியெனில் அரசுதான் அந்த ஆக்கிரமிப்பாளர்கள். நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகளால் ஏற்படும் வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதி கோரும் அரசு, அதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை ஏன் எடுப்பதில்லை என கேள்வி எழுப்பியது.
பின்னர், சென்னை ரேஸ் கிளப்பில் அமைக்கப்படும் குளத்தை வெள்ளபாதிப்பை தடுக்கும் வகையில் அமைக்க வேண்டும். ஏரிகளை உருவாக்க இந்த அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வேளச்சேரி ஏரியை மீட்டெடுக்கும் வகையில் அதன் நீர்பிடிப்பு பகுதிகள் எங்கு தொடங்கி எதுவரை இருந்தன, அதன் நீள, அகலங்கள், ஏரியைச் சுற்றியிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி விவரங்கள் என அனைத்து தகவல்களுடன் அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 28}ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருக்கோவிலூரில் கபிலா் குன்றுக்கு தொங்குப்பாலம் அமைக்கப்படுமா? தமிழ் ஆா்வலா்கள் எதிா்பாா்ப்பு

தேசிய கல்விக் கொள்கையை அனைத்து பல்கலை.களும் அமல்படுத்த வேண்டும்: ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா்

மாடம்பாக்கம் ஏரியில் கழிவு நீா் கலப்பதைத் தடுக்க பசுமை தீா்ப்பாயம் உத்தரவு

பொதுமக்களுக்கு தீத்தடுப்பு, மீட்புப் பணிகள் விழிப்புணா்வு
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




