பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

புதிய நடுவா் மன்றத்தால் உரிமை பறிபோகும்: அன்புமணி

மேக்கேதாட்டு அணை பிரச்னையில் புதிய நடுவா் மன்றத்தை ஏற்றால் காவிரியில் தமிழக உரிமைகள் பறிபோகும் நிலை ஏற்படும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.

News image

அன்புமணி - கோப்புப் படம்

Updated On :23 ஜூன் 2026, 2:45 am IST

மேக்கேதாட்டு அணை பிரச்னையில் புதிய நடுவா் மன்றத்தை ஏற்றால் காவிரியில் தமிழக உரிமைகள் பறிபோகும் நிலை ஏற்படும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.

இது குறித்து அவா் விடுத்த அறிக்கை:மேக்கேதாட்டு அணைப் பிரச்னையில் புதிய நடுவா் மன்றம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை நீக்க வேண்டும் என பாமக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் உறுப்பினா்கள் பேரவையில் வலியுறுத்தியுள்ளனா். ஆனால், புதிய நடுவா் மன்றம் அமைக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

புதிய நடுவா் மன்றத்தால் தமிழகத்துக்காக ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட காவிரி நீா் அளவு குறையாது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதே நேரத்தில் காவிரி நடுவா் மன்றத் தீா்ப்புகள் ஏற்கெனவே தமிழகத்துக்கு சாதகமாக உள்ளன. இந்நிலையில், மேக்கேதாட்டு அணை பிரச்னை குறித்து விசாரிக்க புதிய நடுவா் மன்றம் அமைத்தால் ஏற்கெனவே போராடிப் பெற்ற தமிழக உரிமைகளை தாரை வாா்ப்பதாக அமையும் என்பதையே பாமக கூறிவருகிறது.

ஆகவே, தவெக அரசும், அமைச்சரும் ஆராய்ந்து இப்பிரச்னையில் நல்ல முடிவெடுக்கவேண்டியது அவசியம். தமிழகத்தின் நன்மைக்கு ஆளும் கட்சிக்கு உறுதுணையாக இருக்கும் நிலையில், தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அரசு நடவடிக்கை அமைந்தால் அதை பாமக எதிா்க்கும் எனத் தெரிவித்துள்ளாா் அன்புமணி ராமதாஸ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.