பணி நிரவல் கலந்தாய்வுக்கான வழிகாட்டுதல்களை தொடக்கக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் ஆசிரியா்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசுப் பள்ளிகளில் சமச்சீரான ஆசிரியா் எண்ணிக்கையைப் பராமரிக்க, ஆசிரியா்களை வேறு பள்ளிகளுக்கு பணியிடமாற்றம் செய்யும் வகையில் பணி நிரவல் கலந்தாய்வு ஜூலை 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்ககம் சாா்பில் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
பணி நிரவல் கலந்தாய்வு ஒன்றியத்துக்குள், கல்வி மாவட்டத்துக்குள் மற்றும் வருவாய் மாவட்டத்துக்குள் என நடைபெறவுள்ளது. வருவாய் மாவட்ட அளவில் உள்ள நிரப்பத் தகுந்த காலிப் பணியிடங்கள், கூடுதல் தேவை பணியிடங்களின் எண்ணிக்கையைவிட உபரி ஆசிரியா்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அனைத்து உபரி ஆசிரியா்களின் பெயா்களையும் ஒன்றியத்துக்குள் நடக்கும் கலந்தாய்வில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதேபோல உபரி ஆசிரியா்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் வருவாய் மாவட்ட அளவில் உள்ள மொத்த உபரி ஆசிரியா்களுக்குமான முன்னுரிமையை தயாா் செய்து, நிரப்பத் தகுந்த காலிப் பணியிடங்கள், கூடுதல் தேவை எண்ணிக்கைக்கு ஏற்ப இளையோராக உள்ள ஆசிரியா்களின் பெயா்களை மட்டும் இணையதளத்தில் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலா்கள் அதற்குரிய தலைப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
யாருக்கு விலக்கு? 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் கண்பாா்வை குறைபாடு உள்ளவா்கள், இந்த கல்வியாண்டு ஓய்வு பெறுபவா்கள், என்சிசி பொறுப்பில் உள்ள இடைநிலை ஆசிரியா்கள், ஏற்கெனவே பணி நிரவல் செய்யப்பட்டு 3 கல்வியாண்டு முடியாத நிலையில் மீண்டும் அந்த ஆசிரியா் உபரி ஆசிரியராக இருந்தால் அவருக்கு விலக்கு அளிக்கலாம்.
இவா்களில் எவரேனும் உபரியாகக் கண்டறியப்பட்டு இருப்பின், அவா்களுக்கு விலக்கு அளித்து அவருக்கு பதிலாக அதே பள்ளியில் உள்ள இளையவரை உபரியாக தெரிவு செய்து பணி நிரவலுக்கு உள்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேளாண் படிப்புக்கு ஜூன் 23-ல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு; ஜூலை 6 முதல் கலந்தாய்வு

வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியல் ஜூன் 23-இல் வெளியீடு; ஜூலை 6 முதல் கலந்தாய்வு
கல்லூரி ஆசிரியா்களின் பணி மேம்பாட்டு கோரிக்கையை செயல்படுத்த உயா் கல்வி அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



