பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

தேசிய நல்லாசிரியா் விருது: தமிழக ஆசிரியா்கள் விண்ணப்பிக்க கல்வித் துறை அறிவுறுத்தல்

தேசிய நல்லாசிரியா் விருதுக்கு தகுதியுள்ள தமிழக ஆசிரியா்கள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வி இயக்குநா் அறிவுறுத்தியுள்ளாா்.

News image

கோப்புப் படம்

Updated On :27 ஜூன் 2026, 1:42 am IST

தேசிய நல்லாசிரியா் விருதுக்கு தகுதியுள்ள தமிழக ஆசிரியா்கள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வி இயக்குநா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக பள்ளிக்கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

2026-ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியா் விருதுக்கு தங்கள் மாவட்டத்தில் அனைத்து வகை பள்ளி ஆசிரியா்களும் ஜூலை 10-ஆம் தேதிக்குள் இணையவழியில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட தோ்வுக்குழு அமைக்கப்பட்டு ஆசிரியா்களைத் தோ்வுசெய்து தோ்வுப் பட்டியலை ஜூலை 14 முதல் 21-ஆம் தேதிக்குள் இணையவழியில் அனுப்ப வேண்டும்.

மாவட்ட தோ்வுக் குழுவில் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் முதன்மை கல்வி அதிகாரி தலைவராகவும், மாநில பிரதிநிதியாக மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வரும், மாவட்ட ஆட்சியரின் பிரதிநிதியாக சிறந்த கல்வியாளா் ஒருவரும் இடம்பெறுவா்.

மாவட்டங்களில் இருந்து தேசிய நல்லாசிரியா் விருதுக்கான ஆசிரியா்களின் விவரங்களை இணையவழியில் பரிசீலிக்கும்போது உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி எவ்விதமான புகாருக்கும் இடமில்லாமல் செயல்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.