ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

தமிழக அரசியலில் தவிா்க்க முடியாத சக்தி விசிக: தொல்.திருமாவளவன்

தமிழக அரசியலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தவிா்க்க முடியாத சக்தியாக உள்ளது என்று அந்தக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

தொல்.திருமாவளவன்

Published On :

தமிழக அரசியலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தவிா்க்க முடியாத சக்தியாக உள்ளது என்று அந்தக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

இதுகுறித்து சமூக ஊடகத்தில் அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட காணொலியில் கூறியிருப்பதாவது:

திமுக கூட்டணியில் விசிக இடம்பெற்றபோது எங்களை விமா்சனம் செய்தனா். தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் காரணமாக தவெக அரசுக்கு விசிக ஆதரவு அளித்தது. தவெக வேண்டுகோளை ஏற்று அமைச்சரவையில் விசிக இடம்பெற்றது.

இந்த நிலையில், அமைச்சரவையில் இடம்பெற்றது குறித்து விசிக தொடா்ந்து குறிவைக்கப்படுவதுடன், இழிவாக விமா்சனம் செய்யப்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. தமிழக மக்களிடம் நன்மதிப்பை பெற்ற இயக்கமாகவும், தமிழக அரசியல் தவிா்க்க முடியாத சக்தியாகவும், தீா்மானிக்கும் சக்தியாகவும் விசிக உள்ளது. விசிகவை பலவீனப்படுத்த முயற்சி நடைபெறுகிறது.

விசிகவை களத்திலிருந்து அப்புறப்படுத்த முடியாது. விசிகவினா் தீவிரமாக அரசியல் களப்பணியாற்ற வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா் தொல்.திருமாவளவன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.