/

நடிகை த்ரிஷா துணை முதல்வராகும் அறிவிப்பு வெளிவரலாம்: அதிமுக விமர்சனம்

முதல்வர் விஜய்யின் நட்பு வட்டாரங்களுக்கு அரசுப் பதவிகள் வழங்கப்படுவதாக அதிமுக துணைப் பொதுச் செயலாளர் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு

News image

நடிகை த்ரிஷா - கோப்புப் படம்

Updated On :27 ஜூன் 2026, 4:15 pm IST

முதல்வர் விஜய்யின் நட்பு வட்டாரங்களுக்கு அரசுப் பதவிகள் வழங்கப்படுவதாக அதிமுக துணைப் பொதுச் செயலாளர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

முதல்வர் விஜய் குறித்து முன்னாள் அமைச்சரும் அதிமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது, "ஜெகதீஷ் பழனிசாமி, ஜான் ஆரோக்யசாமி, விஷ்ணு ரெட்டி, ராஜன் பண்டிட், வெங்கட நாராயணா, தன்னுடன் படங்களில் நடித்தவர்கள், மேனேஜர்கள், நட்பு வட்டாரங்கள் என எல்லோருக்கும் அரசுப் பதவிகள் வழங்கிய முதல்வர் விஜய், நட்புக்கும் உறவுக்கும் இலக்கணமாக இருக்கிற நடிகை த்ரிஷாவும் துணை முதல்வராகும் அறிவிப்பும்கூட வெளிவரலாம்.

ஏனெனில், ஜனநாயகத்தில் எதுவும் நடக்கலாம். விஜய் நட்புக்கு இலக்கணமானவர். எல்லோருக்கும் அரசுப் பதவிகள் வழங்கும்போது, நட்புக்கும் உறவுக்கும் இலக்கணமாக இருக்கிற த்ரிஷாவை துணை முதல்வராக்கும் அறிவிப்பை முதல்வர் விஜய் எப்போது வேண்டுமானாலும் வெளியிடலாம்" என்று தெரிவித்தார்.

தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக கே. வெங்கட நாராயணாவை நியமித்து, தமிழ்நாடு அரசு வெள்ளிக்கிழமை (ஜூன் 26) அரசாணை வெளியிட்டது.

இவர், நடிகரும் முதல்வருமான விஜய்யின் கடைசிப் படமான ஜன நாயகன் படத்தை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் கர்நாடகத்தை சேர்ந்தவர் என்பதாலும் இவரின் நியமனத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Summary

Actress Trisha might be offered the post of Deputy CM, says ADMK Leader RB Udhayakumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.