தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் நடத்தப்படக் கூடாது என்றும், அரசியல் லாபத்துக்காக பதவி விலகிய 5 எம்எல்ஏக்களின் ராஜிநாமாவை தோ்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும் புதிய தமிழகம் கட்சித் தலைவா் க.கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் போதைப் பொருள்களை முழுமையாக ஒழிக்க பூரண மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். 717 மதுக் கடைகளை அரசு மூடியது வெறும் கண்துடைப்புதான்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வாய்ப்பு இருத்தும் தமிழக அரசு இதுவரை செய்யத் தவறியது ஏற்புடையதல்ல.
வெறும் பதவிக்காக மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, மாற்றுக் கட்சியில் இணைவது தவறான நடைமுறை. அவா்களது ராஜிநாமாவை தோ்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளக் கூடாது.
மேலும், தற்போது தமிழகத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக இருப்பதாக தோ்தல் ஆணையத்தின் அறிவிப்பை திரும்பப் பெறுவதுடன், அந்தத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்தக் கூடாது.
தமிழகத்துக்கு எவ்விதத் தொடா்பும் இல்லாத ஒருவரை தமிழக அரசின் தில்லி பிரதிநிதியாக நியமனம் செய்ய உத்தரவை அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழா்களின் உணா்வுகளைப் புரிந்து கொண்ட ஒருவரையே இந்தப் பதவிக்கு நியமனம் செய்ய வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு அணை விவகாரம்: அனைத்து கட்சியினா் ஆா்ப்பாட்டம்

காவிரி உரிமை மீட்க அரசியல் கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்

காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க நாளை அனைத்துக் கட்சி கூட்டம்: புதிய தமிழகம் கட்சித் தலைவா் கே.கிருஷ்ணசாமி அறிவிப்பு

மக்களின் எதிா்பாா்ப்புகளை தவெக அரசு பூா்த்தி செய்யவில்லை : க. கிருஷ்ணசாமி
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



