தவெக சார்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
/

ராமநாதபுரத்தில் 5 வயது சிறுமி பலி: குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்; பிரேமலதா

ராமநாதபுரத்தில் 5 வயது சிறுமி பலியான விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.

News image

பிரேமலதா விஜயகாந்த் - (கோப்புப் படம்)

Updated On :29 ஜூன் 2026, 9:44 am IST

ராமநாதபுரத்தில் 5 வயது சிறுமி பலியான விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் நகரில் அதிகாலையில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 5 வயது சிறுமி மாயமாகி, பின்னர் பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. சிறுமி தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்தாரா, அல்லது யாரேனும் கடத்திச் சென்று கொலை செய்து கிணற்றில் வீசியுள்ளனரா, அல்லது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

பெண் குழந்தைகளுக்கு எதிரான இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகுந்த கவலையளிக்கிறது. எனவே, வீட்டில் பாதுகாப்பாகத் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தைக்கே இந்த நிலை ஏற்பட்டால், பாதுகாப்பைத் தேடி மக்கள் எங்கு செல்வது? எத்தனை 'சிங்கப்பெண்' திட்டங்கள் இருந்தாலும், காவல்துறை இருந்தாலும், இதுபோன்ற சம்பவங்களை முழுமையாகத் தடுக்க முடியவில்லையே என்று மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

இதற்கு நிரந்தரமான தீர்வு எப்போது கிடைக்கும்?. இந்தச் சம்பவம் குறித்து உண்மைக் குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து, சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். இந்தத் துயரமான சம்பவத்தில் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அந்தக் குழந்தையின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Summary

Ramanathapuram 5-year-old girl's death: DMDK chief Premalatha demands identification and stringent punishment of the real culprits

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.